tamilnadu

img

விருதுநகரில் கடைகள் அடைப்பு; 900 பேர் கைது

விருதுநகர்:
பாரத் பந்த்-திற்கு ஆதரவு தெரிவித்து விருதுநகர் மாவட்ட வர்த்தகர்கள் கடைகளை அடைத்தனர். மாவட்டத்தில் ஆர்.ஆர்.நகர், சாத்தூர், ஏழாயிரம்பண்ணை ஆகியஊர்களில் முழுமையாக கடைகள் அடைக் கப்பட்டன. சிவகாசியில் 50 சதவீத கடைகள்அடைக்கப்பட்டன.

 திருச்சுழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் தலைமையில் நடைபெற்ற மறியலில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.முருகன், ஒன்றியச் செயலாளர் பி.அன்புச்செல்வன், சிபிஐசீனிவாசன், நீதிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற மறியலில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.வேலுச்சாமி, வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்துவேலு, சிபிஐ வழக்கறிஞர் சீனிவாசன், சக்கணன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஜெயபாரத், மாதர் சங்க மாவட்டத் தலைவர் என்.உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருத்தங்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற மறியலில் ஒன்றியச் செயலாளர் பி.பாலசுப்பிரமணியன், சிபிஐ சுரேஷ், திமுக நகர் செயலாளர் உதயசூரியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சாத்தூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள்தலைமையில் நடைபெற்ற மறியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.சுப்பாராஜ், கே.விஜயகுமார், எம்.சுந்தரபாண்டியன், எஸ்.சரோஜா,சிபிஐ எஸ்.பழனிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்.ஆர்.நகரில் திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தேவராஜ் தலைமையில் நடைபெற்ற மறியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்எம்.சி.பாண்டியன், தெற்கு ஒன்றியச் செயலாளர் பி.நேரு, சிபிஐ வி.பாலமுருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் லிங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.காரியாபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற மறியலில் வட்ட செயலாளர் ஏ.அம் மாசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் எஸ்.காத்தமுத்து தலைமையில் நடைபெற்ற மறியலில் திமுக சார்பில் மைதீன்கான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ், ஆர்.சந்திரமோகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பூங்கோதை, எம்.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சிவகாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் கே.முருகன், சிபிஐக.சமுத்திரம் ஆகயோர் தலைமையில் நடைபெற்ற மறியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.ஆலங்குளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற் மறியலில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், சிபிஐ நடராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சதுரகிரி ஆகியோர் கலந்துகொண்டனர்.இராஜபாளையத்தில் கனராவங்கியை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே அர்ஜூனன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.கணேசன், நகர் செயலாளர் மாரியப்பன். சிபிஐ ரவி, பிகே விஜயன், ஆர்.முருகன் உட்பட ஏராளமானோரை காவல்துறையினர் கைது செய்தனர். காங்கிரஸ் கட்சி வாழ்த்திச் சென்றனர்.

சத்திரப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குருசாமி, ஒன்றியச் செயலாளர் முனியாண்டி மாதர் சங்க நிர்வாகி சஞ்சீவி நாச்சியார் சிபிஐ முத்துமாரி உட்பட ஏராளமானோர் மறியலில் பங்கேற்றனர்.
 சேத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ராமர்சிபிஐ மாவட்டச் செயலாளர் லிங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தங்கவேல், சேத்தூர் நகர் செயலாளர் கணேசன், வனராஜ், முனியசாமி சிபிஐ வீராச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.வத்திராயிருப்பில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி தலைமையில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் வத்திராயிருப்பு நகர் செயலாளர் பழனிசாமி, சிபிஐகோவிந்தன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் திருமலை சிபிஐ வேதநாயகம் ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் சசிகுமார் சிபிஐ மூர்த்தி, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முத்தையா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் பெருமாள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.