கோயம்புத்தூர், அக்.5- தமிழக அரசு தனது நிறுவனத்தி லேயே சட்டத்தை மீறி நிரந்தரமற்ற நிலையில் அத்துக்கூலிகளாக டாஸ் மாக் ஊழியர்களிடம் வேலை வாங்கு வது தொழிலாளர் விரோத நடவ டிக்கை என சிஐடியு டாஸ்மாக் ஊழி யர் சம்மேளன மாநாடு குற்றம்சாட்டி யுள்ளது. உடனடியாக காலமுறை ஊதியம் வழங்குவதற்கான உத்த ரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண் டும் என மாநாட்டு தீர்மானத்தில் வலி யுறுத்தியுள்ளது. சிஐடியு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் 5ஆவது மாநாடு கோவை மசக்காளிபாளையத்தில் உள்ள ஹர்ஷா மஹாலில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பொன்பாரதி தலைமை தாங்கினார். வரவேற்புக் குழு தலைவர் எஸ்.மூர்த்தி வரவேற்பு ரையாற்றினார். முன்னதாக சங்கத் தின் கொடியை டாஸ்மாக் ஊழியர் சம்மேளன துணைத் தலைவர் ஜே. ஆல்துரை ஏற்றிவைத்தார். சிஐடியு மாநில துணைத்தலைவர் இ.பொன்முடி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். இத னைத்தொடர்ந்து பிரதிநிதிகள் மாநாட்டில், சங்கத்தின் வேலை அறிக்கையை சம்மேளன பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் முன் வைத்தார். வரவுசெலவு அறிக்கை யை பொருளாளர் ஜி.சதீஷ் முன் வைத்தார். மாநாட்டை வாழ்த்தி சிஐ டியு தமிழ்நாடு சுமைப்பணி தொழிலா ளர் சம்மேளன பொதுச்செயலாளர் ஆர்.வெங்கிடபதி உரையாற்றினார்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவ னத்தில், 30 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு துவக்கத்தில் ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1500 என தொகுப்பூதியமாக ஊதியம் வழங்கப்பட்டது. டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் தொடர் போராட் டங்களாலும், நீதிமன்ற நடவடிக்கை யாலும் 15 முறை ஊதியத்தில் சிறு உயர்வு பெற்றனர். இது குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் வழங்க வேண் டிய ஊதியத்தைவிட குறைவான தொகையாகும். இதை நீதிமன்றங் கள் சட்டப்படியான ஊதியம் வழங்க உத்தரவுகளும் பிறப்பித்தும் கூட செயல்படுத்தாமல் உழைப்புச்சுரண் டலை செய்து வருகிறது. ஒரு ஊழியர் 480 நாட்கள் தொடர்ந்து பணியாற்றி னாலே பணி நிரந்தரமாக்கப்பட வேண் டும். ஆனால் டாஸ்மாக் நிறுவனத்தில் 18 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றி வரும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்பட வில்லை. அரசு தனது நிறுவனத்தி லேயே சட்டத்தை மீறி நிரந்தரமற்ற நிலையிலேயே அத்தக்கூலிகளா கவே வேலை வாங்கி வருவது தொழி லாளர் விரோத நடவடிக்கையாகும். தமிழக அரசுக்கு சொந்தமான சிவில் சப்ளை (அமுதம் அங்காடி கள்), கோஆப்டெக்ஸ் துணி கடை கள், ஆவின் பாலகங்கள், பூம்புகார் கைவினை கடைகள் உள்ளிட்ட விற் பனை பிரிவுகளில் பணிபுரியும் ஊழி யர்களுக்கு அரசு ஊழியருக்கு இணை யான காலமுறை ஊதியம் வழங்கப் படுகிறது. சம வேலைக்கு சம ஊதி யம் வழங்க வேண்டுமென உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி டாஸ் மாக் ஊழியர்களுக்கு அரசு ஊழியர் களுக்கு இணையான காலமுறை ஊதியம், பணிநிரந்தரம் செய்ய வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்றிட தமிழக அரசை மாநாடு வலியுறுத்தியுள்ளது.
நிர்வாகிகள் தேர்வு
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் சம்மேளனத் தலைவராக இ. பொன்முடி, பொதுச்செயலாளராக கே.திருச்செல்வன், பொருளாளராக ஜி.சந்திரன் உள்ளிட்ட 24 பேர் கொண்ட நிர்வாகக்குழுவும், 54 பேர் கொண்ட மாநிலக்குழுவும் மாநாட்டில் தேர்ந் தெடுக்கப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாநில தலைவர் அ. சவுந்தரராசன் சிறப்புரையாற்றினார். முடிவில் வரவேற்புக்குழு செயலா ளர் ஏ.ஜான்அந்தோணிராஜ் நன்றி கூறினார்.