சென்னை, டிச. 24- தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் கோரிக்கைகள், பிரச்சனைகள் குறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில், உதவி பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், செயலாளர் கே.சி.கோபிகுமார் ஆகியோர் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத் தில் வெள்ளியன்று (டிச. 24) சந்தித்து பேசினர். பின்னர் அ. சவுந்தரராசன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- சமீபத்தில் திருப்பெரும்புதூரில் பாக்ஸ்கான் தொழிலாளர் நடத்திய போராட்டம், அந்த பகுதியில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டப்படியான ஊதியம், விடுதி, உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள், நிர்வாகங்க ளின் அக்கறையற்ற போக்கு ஆகிய வற்றை கண்டித்து தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக திரண்டனர். அந்த தொழிலாளர்கள் தங்கக் கூடிய விடுதிகள், அவர்களுக்கு வழங்கப் படும் ஊதியம், சட்டரீதியான சலுகை கள் போன்றவற்றை முழு ஆய்வுக் குட்படுத்தி அரசு கறாரான நட வடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர்களுக்கு விரோதமான 4 சட்டத் தொகுப்புகளின், மீது விதிகள் உருவாக்க வேண்டும். தொழிற்சங்கங்களின் கருத்துக்களை கேட்டு விதிகளை உருவாக்க வேண் டும். ஒன்றிய அரசின் இ-ஷராம் முறை சாரா தொழிலாளர் தரவு பதிவின் மூலம், இங்குள்ள நலவாரியங்கள் சீர்கெட்டு விடக்கூடாது. பாதிக்கப்படக் கூடாது என்றும், நலவாரிய பதிவுக ளில் உள்ள பிரச்சனைகள், பணப் பலன்கள் வழங்குவதில் உள்ள பிரச்ச னைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளோம்.
ஜவுளித்தொழில்
தமிழகத்தின் மிகப்பெரிய தொழிலாக திகழும் ஜவுளித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது ஊதிய பிரச்சனை, பீடி தொழிலாளர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஊதிய பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. அரசு இந்த பிரச்சனை களில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளோம்.
போக்குவரத்து, மின்சார ஊழியர் பிரச்சனை
அரசு போக்குவரத்து கழகங்கள், மின் வாரியம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊதிய ஒப்பந்தம் நிலுவையில் உள்ளது. எனவே உடனடியாக ஒப்பந்த பேச்சு வார்த்தையை துவங்க அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாட்டு வண்டியில் மணல் எடுப்பவர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்கும் வகையில், கொரோனாவிற்கு முன்பிருந்ததை போல மணல் அள்ளும் உரிமை வழங்க வேண்டும். குளங்களில், கன்மாய்க ளில் மீன் பிடிக்கும் உரிமை பாரம்பரி யமான மீன்பிடி தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. அந்த உரிமையை மீண்டும் அவர்களுக்கு வழங்க வேண்டும்.
பொய்வழக்குகளை திரும்பப் பெறுக
கடந்த அதிமுக ஆட்சியில் தொழி லாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெறப்படும் என முதல்வர் அறிவித்துள்ளதை உடனடி யாக அமல்படுத்த வேண்டும். அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் உள்ளாட்சி, ஊராட்சி அமைப்பு களிலே அமலாகாத நிலை உள்ளது. இந்தியாவிலேயே முதல் தொழிற்சங்கம் மெட்ராஸ் லேபர் யூனியன் உருவானது சென்னை யில்தான். திருவிக, சக்கரை செட்டி யார், சிங்காரவேலர் ஆகியோர் தொழிற்சங்கத் தலைவர்களாக இருந்த கட்டிடங்கள் எல்லாம் பராமரிப்பின்றி கிடக்கின்றன. அந்த கட்டிடங்களை புதுப்பித்து நினை வகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
48 கோரிக்கைகள்
சத்துணவு, ஆஷா, அங்கன்வாடி உள்ளிட்ட லட்சக்கணக்கான திட்ட ஊழியர்களுக்கும், டாஸ்மாக் பணியாளர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கி, அரசு ஊழியர் களாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி யுள்ளோம். மொத்தம் 48 கோரிக்கை கள் அடங்கிய மனுவை முதல்வ ரிடம் அளித்துள்ளோம். இந்த கோரிக்கைகள் மீது பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல மைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.