கன்னியாகுமரியில் நடைபெறும் சிஐடியு மாநில மாநாட்டில் ஏற்றப்படும் செங்கொடி புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டுநூலில் நெய்யப்பட்ட கொடியை மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் எடுத்துக் கொடுக்க, மாநில செயலாளர் இ.முத்துக்குமார் பெற்றுக் கொண்டார். இதில் மாவட்டச் செயலாளர் கே.பகத்சிங் தாஸ், திருவண்ணமலை மாவட்டச் செயலாளர் ஆர்.பாரி, மாவட்டத் தலைவர் கே.காங்கேயன், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.சினிவாசன், ஜி.வசந்தா, வி.சிவப்பிரகாசம், ஆர்.கார்த்திக் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.