திங்கள், ஜனவரி 25, 2021

tamilnadu

img

மதுரை, விருதுநகரில் சிஐடியு, மாதர் போராட்டம்...

மதுரை:
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சிஐடியு சார்பில் மதுரையில் எஸ்.சந்தியாகு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில்   சிஐடியு மாவட்டத் தலைவர் மா.கணேசன், மாவட்டச்  செயலாளர் ஆர்.தெய்வராஜ், பொருளாளர் லூர்துரூபி, மா.பாலசுப்பிரமணியம்,  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இராஜபாளையத்தில் சிஐடியு நகர் கன்வீனர் சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் எம் மகாலட்சுமி, மாவட்டத் துணைத் தலைவர் கணேசன், சோமசுந்தரம்,  முனியாண்டி, விமலா,  ராமர், நகர்செயலாளர் மாரியப்பன், தங்கவேல், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ராமச்சந்திர ராஜா  உள்ளிட்ட பலர்கலந்துகொண்டனர்.

டிஆர்இயு சார்பில் மதுரை மேற்கு நுழைவு வாயிலில்  உதவிக் கோட்டத் தலைவர்  என். கார்த்திக்சங்கிலி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  துணைப் பொதுச் செயலாளர் ஆர்.திருமலை அய்யப்பன், கோட்டச் செயலாளர் ஆர். சங்கரநாராயணன், உதவிகோட்டச் செயலாளர் பி. சரவணன், தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க மாநில உதவித் தலைவர் எஸ் .கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாதர் சங்கம்
மதுரையில்  மாதர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  மாநிலப் பொதுச் செயலாளர் சுகந்தி, மாவட்டத் தலைவர் கே. ராஜேஸ்வரி, செயலாளர் ஆர்.சசிகலா, பொருளாளர் ஆர்.லதா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் க.சுதாராணி, அ.அங்கயற்கண்ணி, ஜென்னி, கே.விஜயா, வி.பானுமதி, சித்ரா, யமுனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;