tamilnadu

img

புதுப்பொலிவுடன் மதுரை பெரியார் பேருந்து நிலையம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரை, டிச. 8- மதுரையில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் பேருந்து நிலையத்தை டிசம்பர் 8 புதனன்று தமிழக முத லமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பேரங்காடி ரூ. 119.56 கோடி, பெரியார் பேருந்து நிலையம் ரூ. 55 கோடி  என்று மொத்தம்  ரூ. 174. 56 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்டு வருகிறது. இதில் ரூ.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெரியார் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகள் நிறுத்தம் செய்யும் பகுதி யினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதனன்று  சென்னையிலிருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன், கே.என்.நேரு,தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அதி காரிகள் பங்கேற்றனர்.

மதுரையில் வணிகவரி-பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணை யாளர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, ஏ. வெங்கடேசன், மு. பூமிநாதன் மற்றும்  பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.  மதுரை மாநகரின் மைய பகுதி யில் 1921-ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது மத்திய பேருந்து நிலையம். 1971 முதல் பெரியார் பேருந்து நிலையமாக மாற்றப்பட்டது.  2018 ஆம் ஆண்டு இறுதியில் ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் பெரியார் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க திட்டமிட்டு,பணிகள் நடைபெற்றன. 57 பேருந்துகள் நிறுத்தும் அளவில் பேருந்து நிலையமும், 450 கடை கள்  இயங்கும்படி வணிக வளாகமும் கட்டப்பட்டுள்ளன.  பேருந்து நிலை யத்தின் தரை தளத்தின் கீழே 2 அடுக்கு களில் 5000 இரு சக்கர வாகனங்களும்,  350 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பயணிகள் காத்திருப்பு பகுதி,   சுரங்கப்பாதை, சுகாதாரமான தண்ணீர் வசதிகள் ஆகியவையும் கட்டமைக்கப்பட்டுள்ளன. 

கண்கவர் ஓவியங்களும் ... ஒளிரும் படங்களும்...

பெரியார் பேருந்து நிலைய கட்டிடங்களில் பிரம்மாண்டமாக கிமு 5 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழி எழுத்துக்களும், மாமதுரை போற்றுவோம் என்ற தலைப்பில் கண்கவர் ஓவியங்களும் வரையப் பட்டுள்ளன. தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் விதமாக நாட்டார் தெய்வங்களின் படங்கள், நாட்டுப் புறக் கலைகளின் படங்கள் வண்ண ஓவியங்களாக படைக்கப்பட்டுள் ளன.  இது தவிர, சுமார் 70 ஆண்டு களுக்கு முந்தைய பெரியார் பேருந்து நிலைய படமும், மதுரையின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்ட பேருந்துகளின் படங்களும், அதில் பயணம் செய்த மக்களின் படங்களும் ஒளிரும் படங்களாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மதுரையின் சுற்றுலாத் தலங்களான திருமலை நாயக்கர் அரண்மனை உள்ளிட்ட இடங்களும், பண்பாட்டு அடையாளங்களான சித்திரை திருவிழா மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளின் படங்களும் ஒளிரும் படங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தம் செய்யும் பகுதியினை மட்டும்  தலைமை செய லகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.  ஸ்டாலின் திறந்து வைத்தார்.  அத்து டன், பெரியார் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா  மையத்தையும், ஜான்சி ராணி பூங்கா வில் தொல்பொருள் அங்காடிகள் அமைக்கும் கட்டிடத்தையும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர்  திறந்து வைத்தார்.  பெரியார் பேருந்து நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சியை முன்னிட்டு துவக்க நிகழ்ச்சியில் மேலூர், திரு வாதவூர், நடைமேடை - 1. திருமங் கலம் நடைமேடை - 2. அலங்கா நல்லூர் நடைமேடை - 3. காரி யாபட்டி நடைமேடை - 4 ஆகிய தளங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டனர். . தொடர்ந்து அழகர்  கோவில், புதூர்  (நமே-1) திருப்பரங்குன்றம்  (நமே- 2), செக்கானூரணி (நமே - 3), திருபுவனம்  (நமே - 4) ஆகிய பகுதி களுக்கான பேருந்துகள் பகுதி  டிச - 9ஆம் தேதியும். நத்தம், ஊமச்சி குளம் (நமே - 1), களிமங்கலம் (நமே - 2), கார்சேரி, சக்கிமங்கலம் (நமே - 3), சோழவந்தான் (நமே - 4) ஆகிய பகுதிகளுக்கான பேருந்துகள் டிச - 10ஆம் தேதி முதலும். எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் (நமே - 1), நெடுங்குளம், சிந்தாமணி (நமே - 2), ஆரப்பாளையம் (நமே - 3) பகுதிகளுக்கான பேருந்துகள் டிசம்பர் 11ஆம் தேதியிலிருந்து இயக்கப்படும். இதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சியில் பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகள்  236 பேருக்கு கருணை அடிப்படை யில் பணி நியமன ஆணையங்களை  தமிழக முதல்வர் வழங்கினார்.

;