tamilnadu

img

கட்டாய இந்தியைப் புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர்!

றுள்ளன. இவை அனைத்தும் சம  உரிமையைக் கொண்ட மொழிகள்.  இன்னும் சில மொழிகளையும் இந்த அட்டவணையில் இணைக்க வேண்டும் என அந்தந்த மொழிகளைப் பேசுவோர் வலியுறுத்தி வருகின்ற னர். இந்நிலையில், இந்தி மொழி யை மட்டும் பொது மொழியாக்க அமித் ஷா தலைமையிலான குழு  பரிந்துரைக்க வேண்டிய அவச ரமோ அவசியமோ எங்கிருந்து வந்  தது? ஒன்றிய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கி லத்தை நீக்கிவிட்டு, இந்தியை முதன்மைப்படுத்தும் பரிந்துரை யும் முன்வைக்கப்பட்டிருப்பது ஏன்?

இந்தி படித்தால் மட்டுமே  வேலை, ஆங்கிலம் இணைப்பு  மொழியாக உள்ள மாநிலங்களி லும் இந்தியைக் கட்டாயமாக்கு வது, அதிகாரிகளோ அலுவலர் களோ இந்தி மொழியைப் பயன்  படுத்தாவிட்டால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுப்பது என்பவை உள்ளிட்ட மேலும் சில பரிந்துரைகளும் ஒன்  றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான நாடாளு மன்றக் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ‘பாரத் மாதா கீ ஜே’ என்று நாடா ளுமன்ற அவையில் அதனை ஒரு அரசியல் கோஷமாக்கிக் குரல் எழுப்பிக் கொண்டே, இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசி யல் சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவின் ஒருமைப்பாட் டுக்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடியது.  இந்திய ஒன்றியத்தில் இந்தி  பேசுகிற மக்களின் எண்ணிக்கை யைவிட, மற்ற மொழிகளைப் பேசு கிற மக்களின் ஒட்டுமொத்த எண் ணிக்கை அதிகம். ஒவ்வொரு மொழிக்  கும் அதற்குரிய சிறப்பு இருக்கி றது. தனித்துவம் இருக்கிறது. மொழிவழிப் பண்பாடு இருக்கி றது. அந்தத் தனித்துவமான பண்  பாட்டுச் சிறப்பைப் பாதுகாக்க வும், இந்தி ஆதிக்கத்திலிருந்து இந்திய மொழிகளைக் காப்பதற்கு மான வேலியாகத்தான் ஆங்கிலம்  என்ற இணைப்பு மொழி, ஒன்றிய அரசின் இணை அலுவல் மொழி யாக நீடிக்கிறது.

தற்போதைய நிலையில், அறி வியல் வளர்ச்சியையும் தொழில்  நுட்ப வசதிகளையும் கவனத்தில்  கொண்டு, எட்டாவது அட்டவணை யில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் அலு வல் மொழியாக்குவதே ஒன்றிய அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.  அதை விடுத்து, அரசியல் சட்  டத்தை மதிக்காமல், இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை ஒன்றிய  பாஜக அரசு தொடர்ந்து மேற்  கொண்டு வருகிறது. கடந்த செப் டம்பர் 16-ஆம் நாள் ‘இந்தி திவஸ்’ கடைப்பிடிக்கப்பட்டபோது ஒன் றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திதான் அலுவல் மொழி  என்றார். இப்போது அவர் தலை மையிலான குழு இந்தியைப் பொதுமொழி என்றும் கல்வி நிலை யங்களில் பயிற்று மொழி என்றும் கட்டாயமாகத் திணிப்பதற்கான பரிந்துரையை முன்வைத்துள் ளது.  இந்தியாவின் பல பகுதிகளி லும் உள்ள ஒன்றிய அரசின் கல்வி  நிலையங்களில் உள்ள ஆசிரியர் கள், அலுவலர்கள் தொடங்கி மாண வர்கள் வரை இந்தி பேசாத மாநி லங்களைச் சேர்ந்தவர்களே அதி கம்.

நடைமுறைக்குச் சாத்தியமில் லாத ஒன்றைக் கட்டாயமாக்க முயல்  வது, இந்திக்காரர்கள் மட்டுமே இந்  தியக் குடிமக்கள் என்பது போல வும், இந்தியாவின் மற்ற மொழி களைப் பேசுவோர் இரண்டாந்தர குடிமக்கள் என்பது போலவும் பிரித்தாளுகின்ற தன்மையைக் கொண்டது. இதனைத் தமிழ்நாடு மட்டுமல்ல, எங்களின் அண்டை  மாநிலங்கள் உள்பட அவரவர் தாய்  மொழியைப் போற்றும் எந்த மாநி லத்தவரும் ஏற்க மாட்டார்கள்.  வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தி யாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைச் சரிசமமாக நடத்திட  வேண்டும். அனைத்து மொழி களும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட  வேண்டும். அதற்கு நேர் எதிரான  மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப் போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம். இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்  திட வேண்டும் என பிரதமர் தலை மையிலான ஒன்றிய அரசை வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.