புதுச்சேரி,டிச.13- புதுச்சேரியில் பிஆர்டிசிக்கு ஒன்றிய அரசு மூலம் புதிதாக 200 பேருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ளோம்அதில் பெண்களுக்குத் தனியாக பிங்க் பேருந்து இயக்க முடிவு செய்து ள்ளோம். இதில் பெண்கள் இலவச மாகப் பயணிக்க அறிவிப்பு வெளியி டுவோம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்தார். புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- போக்குவரத்து அலுவலகத்தில் பெண்கள் உரிமம் பெற வசதியாக சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம் தொடங்கியுள்ளோம். இந்தியா விலேயே முதல் முறையாக இத்திட்டம் புதுவையில் செயல்படுத்தப்படுகிறது. கொரோனா காலத்தில் 10 வால்வோ பேடுந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன. அந்த நிறுவனம் மூலம் குறைந்த செலவில் சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வால்வோ பேடுந்துகளைச் சீரமைக்க அதிக செலவானால் அவற்றை அந்த நிறுவனத்திடமே கொடுத்துப் புதிய பேருந்துகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். பிஆர்டிசியில் டிக்கெட் பரிசோதகர்கள் குறைவாக உள்ளனர். இதனால் தமிழக அரசு நிறுவனத்தோடு இணைந்து பேருந்துகளைப் பரிசோதி க்க அனுமதி பெற்றுள்ளோம். . தமிழகத்தில் பெண்கள் இலவசப் பேருந்துப் பயணம் செல்கின்றனர். அதேபோல பிங்க் பேருந்து இயக்கப்படும்போது பெண்கள் இலவசமாகப் பயணிக்க அறிவிப்பு வெளியிடுவோம். பேருந்து நிறுத்தங்களில், பேருந்துகளில் கேமரா பொருத்தவும், ஜிபிஎஸ் இணைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.