டிசம்பர் 6 அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள். அவரது மகத்தான பங்களிப்புகளை நினைவுகூரும் விதமாக, பாளையங்கோட்டையில் காப்பீட்டு ஊழியர் சங்கமும், சிவராம் கலைக்கூடமும் இணைந்து நடத்திய நிகழ்வில் ஆயிரம் பேனாக்களைக் கொண்டு மாணவிகள் இந்த ஓவியத்தை வரைந்தனர். காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் 28வது மாநாடு டிசம்பர் 11 அன்று பாளையங்கோட்டையில் நடைபெறுகிறது. அம்பேத்கரின் நினைவு தினத்தை ஒட்டியும் மாநாட்டை முன்னிறுத்தியும் ஓவியமாக அம்பேத்கர் எழுந்தார். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இலட்சுமணன், நெல்லை கோட்ட காப்பீட்டு ஊழியர் சங்க தலைவர் மதுபால், பொதுச் செயலாளர் முத்துகுமாரசாமி, தமுஎகச தலைவர் இரா. நாறும்பூநாதன் சிவராம் கலைக்கூடத்தின் கணேசன், ஓவிய ஆசிரியர் வள்ளிநாயகம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.