tamilnadu

img

காரைக்குடியில் புத்தகக் கண்காட்சி துவங்கியது

சிவகங்கை. அக்.1- சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாரதி புத்த கலாயம்,தமிழ்நாடு அறிவி யல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பாக எம்ஏஎம் மண்டபத்தில் அக் டோபர் 9 வரை புத்தக கண்  காட்சி நடைபெற உள்ளது.  அக்டோபர் 1 அன்று புத்த கக் கண்காட்சி தொடக்க விழா தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செய லாளர் முனைவர் கோபிநாத்  தலைமையில் நடைபெற் றது. மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, கிளைத் தலைவர் செந்தில்குமார், புத்தக விழாக் குழு ராஜா மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்குடி சட்ட மன்ற உறுப்பினர் மாங்குடி புத்தக கண்காட்சியை தொட ங்கி வைத்து பேசினார். விழா வில் காரைக்குடி வட்டாடசி யர் மாணிக்கவாசகம், காரைக் கடி நகராட்சி ஆணையர் லெட்சுமணன், தொழில் வணிக தலைவர் சாமி.திராவிட மணி, தொழில் வணிக கழக செயலாளர் கண்ணப்பன், எழுத்தாளர் சபாரெத்தினம், எழுத்தாளர் ஜீவசிந்தன், நேசனல் கல்விக்குழுமத் தின் செயலர் சையது, சிவா னந்தம் உள்பட பலர் பங்கேற்  றனர். அறிவொளி ராஜீ  விழாவை ஒருங்கிணைத்தார்.

;