tamilnadu

img

ஆயுதபூஜை கொண்டாட்டம்: வியாபாரிகள் மகிழ்ச்சி

மதுரை, அக்.3- சரஸ்வதி பூஜை-ஆயுதபூஜை யை  முன்னிட்டு மதுரை,  திண்டுக்  கல்லில் பூக்கள், வாழைப்பழம், பொரி, கடலை விலைகள் உச் சத்திற்கு சென்றது. நவராத்திரி விழாவின் ஒரு அங்கமாக  சரஸ்வதி பூஜை கொண்  டாடப்படுகிறது. மதுரை மாட்டுத் தாவணி மலர்ச் சந்தையில் ஒரு  கிலோ மல்லிகைப் பூ ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்கப்பட்டது. மாட்டுத்தாவணி பூ மார்க் கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் கூறியதாவது:  ஒரு கிலோ ‘மதுரை’ மல்லி ரூ.1,000 முதல் ரூ.1,000 வரையிலும், பட்டர் ரோஸ், சம்பங்கி ரூ. 300க்கும் விற்பனையானது. விற்ப னையாளர்களுக்கு நல்ல விலை கிடைத்தது என்றார். திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டையில் திங்களன்று (விலை  கிலோவில்) அரளி-ரூ.400, முதல்  ரூ.450, செண்டுமல்லி ரூ.150, கோழிக்கொண்டை-ரூ.130, செவ் வந்திப்பூ-ரூ.350, வாடாமல்லி-ரூ.100, துளசி -ரூ.60, பன்னீர் ரோஸ்-  ரூ.300, பட்டன் ரோஸ்-ரூ. 300, செண்டு மல்லி- ரூ.150, சம்பங்கி- ரூ.320க்கும் விற்பனையானது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி யோடு இருந்தனர். பொருட்கள் வாங்கச் சென்ற மக்கள் விலை வாசியைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மொத்த மல்லிகைப் பூ வியாபாரி ஆர்.தங்கப்பாண்டி கூறுகையில், ஒரு கிலோ பூவின் விலை ரூ.1,000 ஆக  உள்ளது என்  றார். 

பொரி விற்பனை

ஆயுதபூஜையின் போது படைக்கப்படும் பொரி, திண்டுக்கல் மாவட்டம் பழனி, எரியோடு மற்றும்  சிவகங்கை மாவட்டம் சிங்கம்பு ணரியில் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 95 கிலோ பொரி மூடை மொத்தச்  சந்தையில்  ரூ.600க்கு விற்பதாகக்  கூறினார் மதுரை கீழமாசி வீதி யைச்  சேர்ந்த பொரி விற்பனையா ளர் ஏ.பூபதி. மதுரையில் ஒரு சிறு வியாபாரி ஒரு லிட்டர் பொரி ரூ. 10-க்கு விற்பனை செய்தார். வாழைப்பழங்கள் திண்டுக்கல் மாவட்டம், வத்த லக்குண்டு வாழைத்தார் சந்தை யில் வாழைத்தார்களின் விலை கடு மையாக உயர்ந்திருந்தது. மாநி லத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாழை பழங்கள் விற்ப னைக்கு வந்திருந்தது. வரத்து அதி கமிருந்தாலும் நல்ல விலை கிடைப்பதாக வாழை விவசாயி கள் தெரிவித்தனர். கற்பூரவல்லி வகைகள் தார் ஒன்றுக்கு அதிக பட்சம் ரூ.600,  பூவன் பழம் வரத்து அதிகரிப்பால் ரூ.250 முதல் ரூ.400 வரையிலும் விற்பனையானது.
 

;