முன்னாள் வன அதிகாரிக்கு துணைபோகும் வனத்துறை
தேனி, மே 13- திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் முன்னாள் வனத்துறை அதி காரி தலைமையில் விதிமுறைகளை மீறி வனத்தை அழித்து புதிய சாலை கள், கட்டிடங்கள் கட்ட வனத்துறை அதிகாரிகள் துணை போயுள்ளனர்.இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு, வெள்ளிமலை, மேக மலை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் திருவில்லிபுத்தூர் -மேகமலை புலி கள் காப்பகம் என அறிவிக்கப்பட்டு விவசாயிகள், மலை மாடு மேய்ப் போர்க்கு வனத்துறையினர் கடும் கட்டுப்பாடுகள் விதித்து அவர்களை வெளியேற்ற துடித்து வருகிறார்கள். வெள்ளிமலை சாலையில் சோதனைச் சாவடி அமைத்து மணல், செங்கல், ஜல்லி, சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்து வருகிறார்கள்.புலிகள் காப்ப கம் எனக் கூறி 3 தலைமுறையாக வசித்து, விவசாயம் செய்து வரும் வன விவசாயிகளை வெளியேற்ற நட வடிக்கை எடுத்து வருகிறார்கள்.மலை மாடுகள், நாட்டு மாடு கள், ஜல்லிக்கட்டு மாடுகள் ஆகிய வற்றை வனப்பகுதிகளில் மேய்க்கக் கூடாது என தடுத்து வருகிறார்கள்.
வனத்தை அழிக்கும் முன்னாள் வன அதிகாரி
இந்நிலையில் புலிகள் காப்ப கத்திற்கு உட்பட்ட பகுதியில் விதி முறைகளை மீறி ஹைவேவிஸ் மலைப்பகுதிகளில் புதிய தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு மேகமலை வன உயிரின சரணாலய காப்பாளராக பணிபுரிந்த ஐஎப்எஸ் அதிகாரி சொர்ணப்பன் மேகமலை வனப்பகுதியை சூறையாடி வரு கிறார். அப்போது அதிகாரியாக பணி புரிந்த போது ஏழை விவசாயிகளை மிரட்டி பணிய வைத்து, புலிகள் காப்பகமாக மாறப் போகிறது, உங்களால் எதுவும் செய்ய முடி யாது எனக் கூறி குறைந்த விலைக்கு சுமார் 120 ஏக்கர் நிலத்தை விலை பேசி, எஸ்எம்ஆர் எஸ்டேட் என்ற பெயரில் ஒரே எஸ்டேட்டாக மாற்றி விட்டார். இதன் உரிமையாளர் திருச்சி யைச் சேர்ந்த பிரபல ரயில்வே ஒப்பந்த தாரர் முத்துராமன் என்று கூறப்படு கிறது. இதன் பங்குதாரர் முன்னாள் வன அதிகாரி சொர்ணப்பன் என கூறப்படுகிறது.
விதிமுறை மீறல்
5 கிலோ மீட்டர் வரை பாறை களை உடைத்து, மரங்களை அழித்து புதிதாக சாலை போட்டுள்ளனர்.மேலும் மூன்று தலைமுறையாக உள்ள குடியிருப்புகளுக்கு மின்சாரம் கொடுக்க தடையாக உள்ள வனத்துறை இவர்களுக்கு தனியாக மின் இணைப்பு வழங்கியுள்ளது.காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மேகமலை சாலைப் போக்கு வரத்திற்கு அனுமதிக்கப்படும் நிலை யில் தனது செல்வாக்கை பயன்ப டுத்தி கட்டுமானப் பொருட்களை சொர்ணப்பன் கொண்டு சென்று, கட்டிடம் எழுப்பியுள்ளார். மூன்று இடங்களில் பிரம்மாண்டமாக தகர கொட்டகை எழுப்பப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் பிடிக்கும் வகையில் நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வரு கிறது. கண்டெய்னர் கொண்டு செல்லப்பட்டு சுற்றுலா பயணிகள் தங்க ஏற்பாடு நடந்து வருகிறது. எதிர்காலத்தில் எக்கோ டூரிஸம் என்ற பெயரில் அனுமதி பெற்று கார்ப்பரேட் கம்பெனி போல கோடி களை அல்ல வன அதிகாரி சொர்ணப்பன் வகையறா முயற்சி செய்து வருகிறது. அரசு பள்ளி, சத்துணவுக் கட்டிடம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை பரா மரிக்க அனுமதி வழங்காத வனத் துறையினர், பாறைகளை உடை த்தும், மரங்களை அழித்து சாலைகள் போடவும் தனியார் லாப நோக்கில் ரோப் கார் வசதி தங்குமிடம் உள்ளி ட்ட வசதிகளை மேற்கொள்ள முன்னாள் அதிகாரி சொர்ணப்ப னுக்கு இப்போதுள்ள வன அதிகாரி கள் துணை போயுள்ளதுதான் வேடிக்கையாக உள்ளது.
விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
இது குறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் தேனி மாவட்டச் செய லாளர் டி.கண்ணன் தெரிவிக்கை யில், விவசாயிகள் விளைவித்த பயிர் களை சந்தைக்கு கொண்டு வரவிடா மல் தடுத்தும், சேதமடைந்த வீடுகளை பராமரிக்கக்கூட விடாமல் தடுத்து வரும் வனத்துறை, வனத்துறை முன்னாள் அதிகாரிக்கு மட்டும் சலுகை காட்டியுள்ளனர். விதிமுறை களை மீறி வணிக நோக்கில் தகர செட் கட்டிடம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதி பெற்ற தாக தெரியவில்லை.சிறு விவசாயி களை புலிகள் காப்பகத்தை சொல்லி ஏமாற்றி, விலைக்கு வாங்கி அவர் களை கூலிக்காரர்களாக மாற்றியுள்ள னர். புலிகள் காப்பகத்தில் விதிகள் மீறப்பட்டிருந்தால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதி லமடைந்த வீடுகளை பராமரிக்க கொண்டு செல்லும் தகரத்தை கூட தடுக்கும் வனத்துறை, கண்டெய்னர் களை எப்படி அனுமதித்தது என்பது புரியவில்லை என்று கூறினார்.