tamilnadu

img

வேளாண் கல்லூரி புதிய கட்டடங்கள்: முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, செப்.6- வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் ரூ. 125 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரத்தில் செய்து முடிக்கப்பட்ட பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் செவ்வாயன்று (செப்.6)  காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். செங்கல்பட்டு, திருப்போரூர், திருக் கழுக்குன்றம், ஓசூர், ஊத்தங்கரை, அகஸ்தீஸ்வரம், ஆலங்காயம், உச்சிப் புளி, முதுகுளத்தூர், கொங்கனாபுரம், குத்தாலம், நாகமங்கலத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், கடலூரில் மண்  ஆய்வுக்கூடம், மதுரை மற்றும் பரமக் குடியில் உரக்கட்டுப்பாடு ஆய்வுக்கூடங்கள், கோவில்பட்டியில் பூச்சிக்கொல்லி ஆய்வுக்கூடம். ராமநாதபுரம் மாவட்டம், எட்டி வயலில் ஒருங்கிணைந்த மிளகாய் வணிக வளாகம், திருப்பூர் மாவட்டத் தில் மேம்படுத்தி தரம் உயர்த்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 2,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள்.  மதுரை மாவட்டம், கோ-புதூரில் ஒருங்கிணைந்த வேளாண்மை வணிக  சந்தை மையம், திருச்சியில் வேளாண் மைப் பொறியியல் பயிற்சி மையக் கட்டடங்கள், மேட்டுப்பாளையத்தில் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யம், பெரியகுளத்தில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான் மலை, வாழவச்சனூர், ஈச்சங்கோட்டை, கிள்ளிக்குளம், மதுரை, கிள்ளிக்குளம் ஆகிய இடங்களிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யங்கள், பல்நோக்கு அரங்கம் உள் ளிட்ட பல்வேறு கட்டடங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும்  துறை அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.