சந்திப்பூர்,டிச.24- ஒடிசா மாநிலம் சந்திப்பூ ரில் அப்யாஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகத்தால் உருவாக்கப்பட்ட இந்த அப்யாஸ் ஏவுகணை காண்பதற்கு சிறிய ரக விமானம்போல உள்ளது. முற்றிலும் உள்நாட்டி லேயே தயாரிக்கப்பட்ட அப்யாஸ் ஏவுகணை எதிரிகளின் வான் இலக்கை துல்லியமாக தாக்கும் அளவுக்கு வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் திறனை சோதிப்பதற்காக ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள கடல் பகுதியில் இருந்து ஏவப்பட்டது. மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்த அப்யாஸ், வானில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழக விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.