tamilnadu

img

கள்ளக்குறிச்சியில் ரூ.15 கோடியில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்

கள்ளக்குறிச்சி, ஜூலை 20- கள்ளக்குறிச்சியில் நடை பெற்ற அரசு விழாவில் 15 ஆயி ரம் பேருக்கு ரூ.111 கோடியில் நலத் திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  கள்ளக் குறிச்சி மாவட்டம் உலகங் காத்தான் கிராமத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதனன்று (ஜூலை 19) நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமை தாங்கினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, சிறப்பு திட்ட செயலாக்கத் முறை செயலாளர் தரேஸ் அகமது, சட்டமன்ற உறுப்பினர் கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் புவனேஸ்வரி பெரு மாள் ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் வரவேற்றார்.  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 19 துறைகளை சேர்ந்த 15 ஆயி ரத்து 495 பயனாளிக ளுக்கு ரூ. 110 கோடியே 93 லட்சத்து 83 ஆயிரத்து 916 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை  வழங்கினார்.  விழாவில் பேசிய அமைச்சர் , “மகளிர் வாழ்வில் ஒளியேற்ற வந்துள்ள திட்டம்தான் கலை ஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். கடந்த 26 மாதங்களில் முதலமைச்சர் 260- க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்” என்றார். கள்ளக் குறிச்சி மாவட்ட விளை யாட்டு அரங்கம் ரூ.15 கோடியில் அமைய உள்ளது.

வானாபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. எனவே நீங்கள் ஒவ்வொருவரும் அரசின் திட்டங்களுக்கு பக்க பல மாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார். முன்னதாக வருவாய், பள்ளிக் கல்வி, மருத்துவம், கூட்டுறவு உள்ளிட்ட 6 துறை களில் ரூ.19 கோடியே 15 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 57 கட்டிடங்களை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.  மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப் பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணி களை காணொளி காட்சியில் பார் வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், திட்ட இயக்குநர் செல்வராணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலை வர் புவனேஸ்வரி பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தங்கம், நகரச் செயலாளர் சுப்ராயலு, துணைத் தலைவர் ஷமீம்பானு அப்துல்ரசாக், ஒன்றியக் குழு தலைவர்கள் அலமேலு ஆறு முகம், திலகவதி நாகராஜன் தாமோதரன், சத்தியமூர்த்தி, ஒன்றிய குழு துணைத் தலை வர்கள் விமலா முருகன், நெடுஞ்  செழியன், நகராட்சி தலைவர் சுப்ராயலு, பேரூராட்சி மன்றத் தலைவர்கள் ரோஜா ரமணி, பன்னீர்செல்வம், துரை தாகபிள்ளை, வீராசாமி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.