tamilnadu

img

புதிய ரக கோதுமை ஜபல்

சிதம்பரம் இரவிச்சந்திரன்

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுவரும் வறட்சி, கடும் வெப்பம் போன்றவற்றைத் தாக்குப்பிடித்து வளரக்கூடிய ஜபல் (Jabal) என்ற புதிய கோதுமை ரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வணிக மற்றும் வன இனங்களைக் கலப்பினம் செய்து இந்த புதிய ரகம் உருவாக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்த்து வளரக்கூடிய புதிய உணவு ரகங்களை உருவாக்கும் சர்வதேச கலப்பினத் திட்டத்தின் கீழ் இந்த ரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பயிர் பன்மயத்தன்மையைப் பாதுகாக்க உதவும் என்று நம்பப்படுகிறது. இன்று உலகில் பல நாடுகளிலும் பரவலாகப் பயிரிடப்படும் டுரம் (Durum) ரகம் பிசா, சப்பாத்தி, ரொட்டி, பல்கர் போன்ற பல உணவுகளை தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த ரகத்தை கலப்பு செய்தே புதிய ரகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜபல் என்ற அரபு சொல்லுக்கு மலை என்று பொருள். சிரியாவின் வறண்ட பிரதேசத்தில் வளரும் காட்டு ரகம் ஒன்றுடன் டுரம் ரகம் கலப்பு செய்து ஜபல் ரகம் உருவாக்கப்பட்டது. இன்று உள்ள பயிர் மற்றும் உணவு முறை காலநிலை பேரிடர்களை சமாளிக்கும் விதத்தில் அமையவில்லை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மனிதக் குறுக்கீடுகளால் ஏற்கனவே சீரழியும் சூழலில் உலகின் உணவுப் பாதுகாப்பிற்கு இது பெரும் அச்சுறுத்தலை விரைவில் ஏற்படுத்தும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோதுமை, நெல், பார்லி, உருளைக்கிழங்கு ரகங்களையே இப்போது விவசாயிகள் அதிகம் பயிரிடுகின்றனர். ஜபல் ரகம் வணிகரீதியில் உடனடியாக கிடைக்க வாய்ப்பில்லை. மொராக்கோவில் விவசாயிகள் இதை பெருமளவில் இன்னும் மூன்று ஆண்டுகளில் பயிரிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டுரம் ரகமே இப்போது அதிக அளவில் வட ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகளில் உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளில் மொராக்கோ இதுவரை இல்லாதஅளவு கடும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால் அங்கு உணவு உற்பத்தி 70 சதவீதத்திற்கும் குறைந்துள்ளது. நிலைமையை சமாளிக்க 2017 முதல் 2021 வரை விஞ்ஞானிகளும், விவசாயிகளும் இணைந்து டுரம் உட்பட பல புதிய கலப்பின ரகஞ்களை பல்வேறு பகுதிகளில் பயிரிட்டனர்.
ஜபலின் வெற்றி
மற்ற வணிக ரக பயிர்கள் அனைத்தும் தோல்வி அடைந்தபோது ஜபல் ரகம் மட்டும் காலநிலை சீரழிவை சமாளித்து செழித்து வளர்ந்தது. தோல்வியடைந்தவற்றில் பல டுரம் ரக கோதுமை இனங்களும் இருந்தன. புதிய ஜபல் ரகம் அதிக விளைச்சலைக் கொடுத்ததுடன் சுவை மிக்க, உறுதி வாய்ந்த ரொட்டி செய்ய உதவும் செழுமை யான மணிகளைக் கொண்ட கோதுமைக் கதிர்களை வழங்கியது. மற்றவை எல்லாம் வறட்சியில் கருகி அழிந்தபோது ஜபல் ரகம் மட்டும் செழித்து வளர்ந்ததைப் பார்க்க விவசாயி களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் மகிழ்ச்சியாக ஏற்பட்டது என்று டுரம் கோதுமை கலப்பினத் திட்டத்திற்கான வறண்ட நிலப்பகுதிப் பயிர்களுக்கான சர்வதேச வேளாண்மை ஆய்வு மையத்தின் லெபனான் பிரிவைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி பிலிப்போ பாசி கூறுகிறார். உலகில் அதிக மக்கள் கோதுமையையே பயன்படுத்து கின்றனர். அண்டார்டிகாவைத் தவிர பூமியின் எல்லா கண்டங்களிலும் இது பயிர் செய்யப்பட்டு பில்லியன் கணக்கான மக்களால் உணவாகப் பயன்படுத்தப்படு கிறது. காலநிலைப் பேரிடர்கள் உலகளவில் கோதுமை உற்பத்தியைப் பாதித்திருக்கிறது. இதனால் பல பகுதி களிலும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 2021இல் டுரம் ரக கோதுமையின் விளைச்சல் வறட்சி போன்ற கார ணங்களால் குறைந்தது.
காலநிலை மாற்றத்தின் சான்று கனடா
அதிக கோதுமையைப் பயிர் செய்யும் உலக நாடுகளில் ஒன்றான கனடாவில் வரலாறு காணாத வெப்பம் மற்றும் அதைத் தொடர்ந்து சில மாதங்களில் ஏற்பட்ட பெருமழை காரணமாக கோதுமை விளைச்சல் பெரிதும் பாதிக்கப் பட்டு டுரம் ரக கோதுமையின் விலை 90சதவீதம் அதிகரித் தது. கடந்த நூற்றாண்டில் கனடா விவசாயிகள் பாரம்பரிய ரகங்களைக் கைவிட்டு மரபணு மாற்றம் செய்யப்பட்ட ரகங்களையே அதிகம் பயிர் செய்தனர். இதனால் புதிய ரகங்களை உருவாக்க பல ஆண்டுகளானது. காலநிலை நாளுக்குநாள் மோசமாகிவருவதால் அதற் கேற்ப இடர்களை சமாளித்து வளரும் புதிய ரகங்களை உரு வாக்கவேண்டியது அவசியம். பயிர்களை தாக்கும் கிருமிகள் மனிதன் பயன்படுத்தும் நோய் தடுப்பு முறை களுக்கு எதிராக நின்று புதிய தீவிர நோய்களை ஏற்படுத்து கின்றன. வணிக ரகங்களைக் காட்டிலும் இயற்கையில் பரிணமித்து காட்டில் வளரும் ரகங்களே காலநிலை பேரிடர்களை சிறந்த முறையில் சமாளிக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ரகங்கள் வளம் குறைந்த மண், அதிதீவிர வெப்பம், வெள்ளப்பெருக்கு, வறட்சி போன்ற கடினமான சூழ்நிலைகளைத் தாக்குப் பிடித்து வளர்கின்றன. வருங்காலப் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள மறக்கப் பட்ட பாரம்பரிய ரக விதைகளே கலப்பினம் செய்ய உகந்தவை என்று கருதப்படுகிறது. ஆனால் பசுமைப்புரட் சிக்குப் பிந்தைய காலத்தில் பாரம்பரிய ரகங்கள் பயிர்ப் பன்மயத்தன்மை, விளைச்சல் போன்றவற்றிற்காகப் புறக்கணிக்கப்பட்டன.
விதைக் கம்பெனிகள் ஆக்கிரமிப்பு                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         நீடித்த நிலையான உணவு முறைகளுக்கான பன் னாட்டு ஆய்வுக்குழு வேளாண்முறை மற்றும் நிலப்பரப் பில் மாற்றங்கள் தேவை என்று கூறுகிறது. உலகம் முழு வதும் விவசாயிகள் வேறுபட்ட 7000 பயிர் இனங்களை உரு வாக்கியுள்ளனர். சர்வதேச மரபணு விதை வங்கிக்காக 2.1 மில்லியனுக்கும் மேற்பட்ட தாவர இனங்களை கொடை யாக அளித்துள்ளனர். ஆனால் இதன் முழுப்பயனையும் நான்கைந்து பன்னாட்டு விதை கம்பெனிகள் கைப்பற்றி விட்டன என்று வேளாண் பன்மயத்தன்மை மற்றும் உயிரித்தொழில்நுட்ப நிபுணர் பாட் மூனி கூறுகிறார். ஆனால் ஜபல் விவசாயிகளும் விஞ்ஞானிகளும் கை கோர்த்து ஒத்துழைத்து ஒன்றுபட்டு உருவாக்கியுள்ள ரகம். மக்கட்தொகை எண்ணூறு கோடியைத் தொட்டு விட்ட நிலையில் உலக மக்களின் பசியைப் போக்க ஜபல் உதவும் என்று நம்புவோம்.