திருச்சிராப்பள்ளி, ஜூலை 4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சி புறநகர் மாவட்டத்தில் தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா சேர்ப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்சியின் திரு வெறும்பூர் இடைக்கமிட்டி சார்பில் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி திரு வெறும்பூரில் திங்களன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டக்குழு உறுப்பினர் தெய்வநீதி தலைமை வகித்தார். இதில் 80 ஆண்டு மற்றும் அரையாண்டு சந்தாவிற்கான தொகை ரூ.81,500 - ஐ தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டியிடம் புறநகர் மாவட்ட செயலாளர் எம்.ஜெயசீலன், ஒன்றிய செயலாளர் மல்லிகா ஆகியோர் வழங்கினர். பின்னர் முதன்மை பொதுமேலா ளர் என்.பாண்டி பேசுகையில், உழைப் பாளி மக்கள் சந்திக்கக்கூடிய வாழ்வியல் அவலங்களைச் சொல்வ தும், அதற்கு தீர்வு காண்பதும், அவர் களின் குரலாக ஒலிப்பது தீக்கதிர் நாளி தழ் . கிராமங்கள் தோறும் அனைவர் கைகளிலும் இருக்க வேண்டிய பத்திரிகை தீக்கதிர். திருவெறும்பூர் பகுதியில் கட்சியின் அனைத்துக் கிளைகளுக்கும் தீக்கதிரை கொண்டு சேர்த்திருப்பது பெருமைக்குரியது. இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் தீக்கதிர் நாளிதழை கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரவி, யமுனா, மகேந்தி ரன், தமிழ்ச்செல்வன், சங்கர், பெரிய சாமி, சுப்பிரமணி, சித்ரா, தீக்கதிர் திருச்சி பதிப்பு பொதுமேலாளர் ஜெய பால் மற்றும் முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றியக்குழு உறுப்பினர் கணேசன் நன்றி கூறினார். திருச்சி புறநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு இடைக்கமிட்டி செய லாளர்கள் தலைமையில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதில் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், தீக்கதிர் முதன்மை பொதுமேலாளர் என்.பாண்டி, சிபிஎம் சட்டமன்ற உறுப் பினர் எம்.சின்னத்துரை ஆகியோர் சந்தாக்களை பெற்று வருகின்றனர். இந்நிகழ்ச்சிகளின் முத்தாய்ப்பாய் ஜூலை 12ஆ ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம் 500 தீக்கதிர் சந்தா விற்கான தொகை ஒப்படைக்கப்படு கிறது.