பாட்னா, செப். 12 - எதிர்க்கட்சிகளின் அணி உரு வானால், மூன்றாவது அணியாக அல்லா மல், அதுதான் முதல் அணியாக இருக்கும் என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி கூறியுள்ளார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், எதிர்க்கட்சிகளை ஒருங்கி ணைக்கும் நிதிஷ் குமாரின் முயற்சி குறித்த கேள்விக்கு, “ஒரு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. பீகார் ஒரு நல்ல முன்மாதிரியை வழங்கியுள்ளது. அது மற்ற பகுதிகளிலும் பிரதிபலிக்க வேண்டும். நிதிஷ் பல தலைவர்களைத் சந்தித்துள்ளார், லாலுவும் பேசினார். நானும் சந்தித்து வருகிறேன். சோனியா காந்தி திரும்பி வந்ததும், நிதீஷ் குமாரும், லாலு பிரசாத்தும் அவரைச் சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிப்பார்கள்” என்று தெரி வித்துள்ளார். “காங்கிரஸை கணக்கீடுகளில் இருந்து விலக்கி வைக்க முடியாது. நாடாளுமன்றத்தில் அவர்களின் எண்ணிக்கை எங்களை விட அதிகமாக இருப்பதை மறுத்துவிட முடியாது. 2024 தேர்தலின் முடிவில், எண்களே தீர்மா னிக்கும் காரணியாக இருக்கும், அறிக்கை கள் அல்ல” எனவும் தேஜஸ்வி கூறியுள்ளார்.
பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றா வது அணி உருவாக வாய்ப்பு உள்ளதா? என்ற மற்றொரு கேள்விக்கு, “ஒரு அணி உருவாக்கப்பட்டால் அது முதல் அணியாகத்தான் இருக்கும் மூன்றாவது அணியாக இருக்காது. நாட்டின் நல னுக்காக காங்கிரஸ், சோசலிச பின்னணி கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பிற கட்சிகளுக்கு இடையே ஒரு கருத்தொற்றுமை உருவாக வேண்டும். பாஜக ஆளாத பிறமாநிலங்களில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்தால் 2024 பொதுத் தேர்தலில் பாஜக-வை (பாஜக) தோற்கடிப்பதில் வெற்றி பெறு வோம்” என்றும் தேஜஸ்வி நம்பிக்கை தெரிவித்துள்ளார். “ஐக்கிய ஜனதா தளம் வெளி யேறிய பிறகு பாஜக பலம் ஏற்கெனவே குறைந்துவிட்டது. கணக்குப்படி பார்த்தால் பீகாரில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகளின் மொத்த வாக்கு சதவிதம் 50 சதவிகிதத்தை தாண்டி யுள்ளது. கடந்த முறை, பீகாரில் 40 இடங்களில் 39 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை வெற்றிபெற முடியாது. ராஜஸ் தானில் காங்கிரஸூக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஆனால் அது மீண்டும் நடக்காது. நாங்கள் கைகோர்த்து ஒரு வியூகத்துடன் போராடினால், கடந்த முறை அவர்கள் பெற்ற இடங்களை சரிபாதியாக குறைத்து விட முடியும்” என்றும் கூறியுள்ளார்.