tamilnadu

img

1977 ஆம் ஆண்டைப் போலவே 2024 லிலும் ஒரு அரசியல் நிலநடுக்கம்! - சி.ராம் மனோகர் ரெட்டி

கிராமப்புற மக்கள், ஒடுக்கப்பட்ட வர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் 1977-ஆம் ஆண்டைப் போலவே  2024 லிலும் இனி இந்த அரசு வேண்டாம் என்று  அழுத்தமா கச் சொல்லியுள்ளனர். 21 மாத கால தேசிய அவசர நிலைக்குப் பிறகு 1977 தேர்தலில் இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டார். அன்றைய பெற் றோர், தாத்தா, பாட்டி செய்ததை இன் றைய வாக்காளர்கள் 2024இல்  கூட்டா கச் சாதித்துள்ளனர். 1977 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி யை வீழ்த்தியவர்கள் நகர்ப்புற வாக்கா ளர்களோ, படித்தவர்களோ, நடுத்தர வர்க்கத்தினரோ அல்ல. கிராமப்புற மக்கள். ஒடுக்கப்பட்டவர்கள், வேலை யின்மையால் பாதித்தவர்கள் அதைச் செய்து முடித்தனர்.

சுக்குநூறாக உடைந்த கட்டுக்கதை

பிராந்திய அளவிலான வேறுபாடுகள் இன்றைய  தேர்தல் முடிவில் எதிரொலிக் கின்றன. பாஜக புதிய பகுதிகளில் வெற்றி (ஒரிசா) பழைய இடங்களில் கெட்டிப் படுத்தப்படுதல் (குஜராத், மத்தியப் பிரதே சம்) ஓரிரு மாநிலங்களில் வாக்குகள் சதவிகிதம் உயர்வு (தமிழ்நாடு,கேரளா). எப்படி இருந்தாலும் ஒட்டுமொத்தமான விளைவு மகத்தானது. வெல்லற்கரிய  ஆளுமை உடையவர் மோடி என்ற கட்டுக் கதை சுக்குநூறாக்கப்பட்டது. அவசர நிலை காலம் முடிவுக்கு  வந்த போதும் பிராந்திய வேறுபாடுகள் இருந்தன. இந்திரா காந்தி வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கில் தோற்கடிக்கப் பட்டார். தெற்கில் காங்கிரஸ் தனியாக நின்றது. காங்கிரஸ் தோல்வியை தழுவி யது என்பது தான் வரலாற்று உண்மை. 1977-இல் இந்திரா காங்கிரஸ் பதவி பறிபோனது. ஆனால் தற்போது மோடி  பதவியில் நீடிக்கிறார் என்று வாட்ஸ் அப் பல்கலைக்கழகங்கள் காங்கிரஸை தூற்றுவார்கள். உண்மையில் என்ன நடந்தது என்பதை சற்று ஆராய்வோம்!

அப்போது  நிராகரிப்பு! தற்போது படுகாயம்!

1970-இல் அரசியல் அமைப்பு ரீதியாக திணிக்கப்பட்ட சர்வாதிகாரம் நிராக ரிக்கப்பட்டது. 2024 அரசியலமைப்பிற்கு முரணாக மோடி திணித்த சர்வாதிகாரம் தகர்க்கப்பட்டது. அப்பொழுது இந்திரா காந்தியின் இருபது அம்சத் திட்டத்தை மக்கள் நிராகரித்தனர். தற்போது மோடியின் உத்தரவாதங்களை செல்லாக்காசாக்கி  மதிப்பிழக்கச் செய்த னர். ரயில்கள் சரியான நேரத்தில் இயங்கு கின்றன என்று முழக்கத்தை அப்பொ ழுது ஏற்க மறுத்தார்கள். நெரிசல் நிறைந்த பொது ரயில்களை புறக்க ணித்து அதற்கு பதிலாக இயக்கப்பட்ட” வந்தே பாரத்” சிறப்பு ரயில்களை இப்பொழுது நிராகரித்து விட்டனர்.

அதிகார துஷ்பிரயோகம்

2024-இல் பாஜகவை ஆட்சியில் இருந்து வாக்காளர்கள் தூக்கி எறிய முடியாததற்கு ஒரே ஒரு காரணம்தான். அதிகார துஷ்பிரயோகம், நீதித்துறை உள்ளிட்ட அனைத்துஅரசியல் சாசன அமைப்பு நிறுவனங்கள்,  ஊடகங்கள் என எல்லா அதிகார எந்திரங்களின் துஷ் பிரயோகம், வலிமையையும் அது ஒரு சேர பெற்றிருந்தது. ஆனால் 1977-இல் இந்திரா காந்தியை விட சக்தி வாய்ந்த பிரச்சார எந்திரங்களை எதிர்த்து போராட வேண்டி இருந்தது. அவசர நிலையின்  போது அரசியல் எதிரிகள் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டனர். ஊடகங்கள் மெத்தன மாக இருந்தன. அரிய விதிவிலக்குக ளை தவிர்த்து, நீதிமன்றங்கள்  சரணடைந் தன. அதிகார மையங்கள் பயத்தில் நடுங்கின. வணிக நலன்கள் அரசிற்கு ஆதரவாக இருந்தன. காற்றிலே கூட அச்சத்தின் மணம் வீசியது. அது ஏற்படுத் திய ஒழுக்கத்திற்காக  நடுத்தரவர்க்கம் நிச்சயமாக அந்த எதேச்சதிகாரத்தை நேசித்தது. இது சமீபத்திய ஆண்டுகளில் இந்தி யாவை சூழ்ந்துள்ள சர்வாதிகார சூழ லையும் நடுத்தர வர்க்கத்தினர் இடையே அது அனுபவித்துவரும் ஆதரவையும் மிகச் சரியாக விவரிக்கிறது. இந்திரா  காந்தி சர்வாதிகாரத்திற்கும் நரேந்திர மோடி சர்வாதிகாரத்திற்கும் இடையே உள்ள நுண்ணிய வேறுபாடுகளை மாடு கள் போல முடிவில்லாமல் நாம் அசை போடலாம். ஆனால் அதில் இருக்கும் வேறுபாடுகள் சமீபத்திய ஆண்டுகளில்  மிக  பயமுறுத்தும் ஒரு பெரிய சக்தியை சுட்டிக்காட்டுகின்றன. ஒன்றிய அரசின் அனைத்து நிறுவனங்களும் அரசியல் அமைப்பின் நிறுவனங்கள்- நீதி மன்றங்கள், ஊடகங்கள், காவல்துறை மற்றும் அதிகார இயந்திரங்கள் அவர்க ளின் அரசியல் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டன. மோடி அரசு மற்றும் அதன் அரசியல் எந்திரத்தின் உத்தரவுக ளுக்கு ஏற்ப தாங்கள் அனைத்தையும் சரியாக செய்வதாக அவர்கள் அனை வரும் நம்பினர்.

தேர்தல் நடைபெற்ற சூழல்

1977-இல் அவசர நிலை அமலில் இருந்த போதும் தேர்தல்கள் நடை பெற்றன. ஆனாலும் தேர்தலுக்கு முன்ன தாக எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறை யில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கட்டுப் பாடுகள் தளர்த்தப் பட்டதும் பத்திரிகைக ளின் குரல் ஒலித்தது.ஆறு ஆண்டுக ளுக்குப் பிறகு பொது தேர்தல் நடத் தப்பட்ட பொழுது தேர்தல் ஆணையம் தன் இறையாண்மையை  உணரத்  துவங்கியது.1977 தேர்தலை முற்றிலும் நியாயமானவை என  ஏற்க முடியாது. ஆனாலும் போட்டியிடக்கூடிய சூழல் இருந்தது என்பதை எதிர்க்கட்சிகளும் வாக்காளர்களும் உணர்ந்திருந்தனர். 2024 தேர்தல் நடைபெற்ற போது எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் .அரசியல் தலை வர்கள் மிரட்டப்பட்டனர். பயப்படக்கூடிய அரசியல்வாதிகளை தன் பக்கம் இழுத் தது, எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்கு களை முடக்கியது ஆகியவற்றை மீண்டும் மீண்டும் நாம் நினைவுபடுத்தும் தேவை உள்ளது. ஒரு சில ஊடகங்கள் தவிர மற்ற அனைத்துமே பாஜகவை மேலும் வளர்த்து “ஆப் தி பார், 400பார்” என்ற முழக்கத்தை பரப்பி அவர்கள் லாவணி யைத்  தொடர்ந்தன. ஊடகங்கள் எது குறித்தாவது கேள்வி எழுப்பினால் எதிரிகளாக சித்தரிக்கப் பட்டனர். தங்கள் ஆன்மாவை விற்று விட்ட ஊடகவியலாளர்கள்,  முடி சூட்டப் பட வேண்டிய வாழ்நாள் முழுவதும் வெல்லவே  முடியாத ஒரு பேரரசரின் உருவத்தை உருவாக்க முயன்றன. முஸ்லிம் சமூகத்தை குறி வைத்து இது வரை இல்லாத அளவிற்கு மிக மோச மான பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப் பட்ட பொழுது தேர்தல் ஆணையம் கப்சிப் என மவுனம் காத்தது.

போதும்! இது போதும்!

50 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தைப் போலவே இந்த தேர்தலும் ஒரு இயல்பான ஒன்றாக இருக்கப் போவ தில்லை என்பதை வாக்காளர்கள் நன்கு  அறிந்திருந்தனர். இந்தியாவின் எதிர்கா லம் ஆபத்தில் உள்ளது என்பதையும் உணர்ந்திருந்தனர். தேர்ந்தெடுக்கப் பட்ட எதேச்சதிகாரத்திற்கும் வெறுப்பால் பிளவுபட்ட சமூகத்திற்கும் இடையே யாரை தேர்ந்தெடுப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். சரமாரியான பொய் வாக்குறுதிகள், எதிர்கால தேசப் பெருமை என்ற கானல் நீர் இரண்டுக்கும் இடையே அவளுடைய வாக்குகள் விலை பேசப்பட போகிறதா என அவள் தீர்மானிக்க வேண்டும்.அவள் புத்திசாலித்தனமாக யோசித்தாள். போதும்! இதுவே போதும்! என தடுத்து நிறுத்தினாள். பாஜக விரும்பிய சூப்பர் மெஜாரிட்டியை தன் விரல் வலிமையின் மூலம் மறுத்தால் மட்டும் போதாது அதை சிறுபான்மையாகவும் குறைக்க வேண்டும் என முடிவு செய்தாள். இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அடைந்த அரசியல் தோல்வியின் அளவை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதன் முக்கியத்துவத்தை நன்கு உணர வேண்டும். நேர்மையாக இருந்திருந்தால்... வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது முறை! (ஆனால் பாஜக பெரும்பான்மையுடன் அல்ல ஒரு கூட்டணியில்) அல்லது மோடி 3.0 (ஆம், ஆனால் மீண்டும் கூட்டணி பங்காளிகள் ஆதரவோடு மட்டுமே) என்ற கூற்றுக ளால் நாம் ஏமாறக்கூடாது.சில வாரங்கள் முன்பு வரை வெல்லவே முடியாது என்று கூக்குரலிட்டு கொண்டிருந்த, 1000 ஆண்டு பாரம்பரியத்தை கொண்டிருந்த ஒரு அரசியல் கட்சி தன்னுடைய தரத்தை இழந்து மிகவும் கீழே சென்றது. பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டு இருக்கலாம். ஆனால் தக்க பாடம் அதற்கு புகட்டப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் அமைப்புக ளும் தங்கள் பொறுப்புகளை நிறை வேற்றுவதில் நேர்மையாக இருந்திருந் தால், எதிர்க்கட்சிகளை வேட்டையாடிய தற்கு எதிரான நடவடிக்கையில் இருந்து ஆட்சியாளர்களை தப்ப விடாமல் செய்தி ருந்தால் உண்மையான சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் முடிவு 1977 ஐப்  போலவே முழுமையானதாக இருந்திருக்கும்.

மக்கள் தீர்ப்பின் மகத்துவம்!

அடுத்த சுற்று தேர்தலில் இந்த பணி யை முடிக்கும் நம்பிக்கை இந்தியா வின் வாக்காளர்களுக்கு இருக்க வேண்டு மானால் தாங்கள் சாதித்துள்ள மகத்து வத்தைபற்றி அவர்கள் முதலில் பெரு மிதம் அடைய வேண்டும். அதனால்தான் மோடியும் பாஜகவும் எந்த அளவிற்கு அதிகாரத்தில் கீழிறக்கப்பட்டுள்ளனர் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சிறுபான்மையினராக நாடா ளுமன்றத்தில் குறைக்கப்பட்டாலும் நிச்ச யமாக அவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார் கள். பதவி பலம், பண பலம் இரண்டும் அவர்களிடம் உள்ளது. அதிகாரத்தின் அனைத்து நெம்புகோல்களும் அவர்கள் வசம் உள்ளன. அவர்களுடைய கூட்டாளிகள் பெரிய வர்த்தகர்கள். தாங்கள் செயல்படும் முறையை மாற்ற மாட்டார்கள். ஜனநாய கத்தை  இயல்பாகவே அவர்கள் மதிப்பது கிடையாது. கடந்த 10 வருடமாக  நாம் பார்த்தோம். தோல்வி அடைந்து பலவீன மாகியுள்ளார்கள். 1977 தேர்தலுக்குப் பிறகு கிடைத்த படிப்பினையும் இது தான்.அது நமக்கு வலிமை அளிக்க வேண்டும். 2024-இல் “400 பார்” என்று முடிந்தி ருந்தால் இதே எதேச்சதிகாரத்தை வீழ்த்தும் நம்பிக்கை நமக்கு எஞ்சியி ருக்காது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசை நாடாளுமன்றத்திலும் தெருக்க ளிலும் கேள்வி கேட்பதற்கு எதிர்க்கட்சி களுக்கு வாக்காளர்கள் அதிகாரத்தை அளித்துள்ளனர். இந்தியாவின் ஜனநா யகத்தை பாதுகாக்கும் பொறுப்பு தங்களுக்கும் உள்ளது என்பதை அரசியல் அமைப்புகளுக்கு வலுவான சமிக்ஞைகள் மூலம் கோடிட்டுக் காண் பித்துள்ளனர். இந்திய வாக்காளரிடம் இதைவிட அதிகமாக நாம் எப்படி எதிர் பார்க்க முடியும்?

கட்டுரையாளர் : பத்திரிகையாளர், ஹைதராபாத் 
நன்றி : தி இந்து 13/6/24, 
தமிழில் : கடலூர் சுகுமாரன்

;