வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

நரேந்திர தபோல்கர் கொலை வழக்கு : ஆதார அழிப்புக்கு துணைபோன வழக்கறிஞரின் காவல் நீட்டிப்பு

மும்பை:
பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை வழக்கில், ஆதாரங்களை அழிப்பதற்குத் துணைபோன வழக்கறிஞரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர், கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்துத்துவா பயங்கரவாத அமைப்புக்களைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இவ்வழக்கில், சஞ்சீவ் புனலேக்கர் என்ற வழக்கறிஞர் மற்றும் அவரது உதவியாளர் விக்ரம் பாவே ஆகியோரையும் சிபிஐ போலீசார் கைது செய்திருந்தனர். தபோல்கரை சுடுவதற்கு பயன் படுத்திய துப்பாக்கி, போலீசார் கைகளுக்கு கிடைத்து விடாமல் அழித்து விடுமாறு, கொலையாளியான ஷரத் கலாஸ்கருக்கு அறிவுரை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், புனலேக்கர் கைது செய்யப்பட்டார்.

இவரை ஜூன் 23-வரை சிபிஐ காவலில் வைக்க, புனே நீதிமன்றம் கூறியிருந்தது. தற்போது இந்த காவலை ஜூலை 6-ஆம் தேதி வரை நீட்டித்து, கூடுதல் அமர்வு சிறப்பு நீதிபதி ஆர்.எம் பாண்டே உத்தரவிட்டுள்ளார்.“சஞ்சீவ் புனலேக்கரின் லேப்டாப்பிலிருந்து, அவர்மீதான குற்றச்சாட்டுக்குரிய ஆவணங்களை மீட்டெடுத்துள்ள நிலையில், அதுகுறித்து விசாரிக்கவேண்டியுள்ளதாகவும், அதேநேரம் புனலேக்கரை காவலில் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை” என்றும் சிபிஐ கூறியிருந்தது. எனினும், புனலேக்கரின் காவலை ஜூலை 6 வரை, புனே நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

;