tamilnadu

img

அறிவியல் மாநாட்டில் திருவள்ளூர் மாவட்ட மாணவர்கள் கட்டுரை தேர்வு

மாவட்ட ஆட்சியர் பாராட்டு 

திருவள்ளூர், ஜன.10- 27 வது தேசிய அறிவியல் மாநாடு திருவ னந்தபுரத்தில் கடந்த  டிசம்பர் 27 28 29 ஆகிய  தேதிகளில் நடைபெற்றது. அதில் தேசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து  பள்ளி மாணவர்களிடமிருந்து சுமார் 1600 ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்பு களில் மாணவர்கள் சமர்ப்பித்தனர் முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி  மற்றும் அம்பத்தூரில் உள்ள சேது பாஸ்கரா  மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்து கொண்ட னர். 9ஆம் வகுப்பு படிக்கும் ருத்ரன் மற்றும்  ரஞ்சித் ரோஷன் ஆகியோரின் ஆய்வுக்கட்டு ரைகள் சிறந்த 10 கட்டுரைகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இது ஐந்து ஆண்டு களுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள  பெருமையாகும். ஒரிசாவில் நடந்த மாநாட்டின் போது எல்லா புரம் ஒன்றியம் நெய்வேலி ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி   மாணவர்கள் பிரவீனா மற்றும் யாமினி ஆகியோர் கலந்து கொண்ட னர்.  இதில் கலந்து கொண்ட அனைவரும் திரு வள்ளூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பில்  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திரு வள்ளூர் மாவட்டச் செயலாளர் மோசஸ் பிரபு,  என்.சி.எஸ்.சி  மாவட்ட ஒருங்கிணைப்பா ளர்கள் தாளமுத்து, நடராசன், மதிவாணன், வேலாயுதம், ராஜேந்திரன்,பாலசுந்தரம், பாண்டியன் மற்றும் ஆசிரியர்கள்  உடனி ருந்தனர்.