tamilnadu

img

ராகுலுக்கு சத்ருகன் பாராட்டு

காங்கிரஸ் தலைவர்ராகுல் காந்தி ‘சூழ்நிலைகளின் நாயகன்’ என்றும், ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம்வழங்கும் அவரின் திட்டம் ‘நேர்த்தியான யுக்தி’ என்றும் பாஜக தலைவர் சத்ருகன் சின்கா பாராட்டியுள்ளார். ராகுலை விமர்சிப்பவர்கள், வங்கிக் கணக்கில் ரூ. 15 லட்சம் போடுவோம், 2 கோடி வேலை தருவோம் என்றுஅளித்த வாக்குறுதிகள் பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன்? என்றும் சத்ருகன் சின்கா கேட்டுள்ளார். சத்ருகன் சின்கா, வியாழக்கிழமையன்று, முறைப்படி காங்கிரசில் இணைவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அவருக்கு பீகாரின் பாட்சா சாகிப்தொகுதி ஒதுக்கப்படுகிறது.




;