தில்லி நீதிமன்றம் புது உத்தரவு
புதுதில்லி,ஜன.17- நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக் கும் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதற்காக தில்லி நீதிமன்றம் புதிய உத்த ரவை பிறப்பித்துள்ளது. குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துவிட்டதைத் தொ டர்ந்து, புதிய தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது. குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி 22 ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவ னான முகேஷ் சிங், தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவ ருக்கு கருணை மனு அனுப்பினான்.
இந்த கருணை மனுவை நிராகரிக்கு மாறு தில்லி மாநில அரசு, துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியது. தில்லி துணை நிலை ஆளுநரும், முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை அனுப்பினார். மத்திய உள்துறை அமைச்ச கத்தின் பரிசீலனைக்குப் பின்னர் கருணை மனு, வியாழனன்று இரவு குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து குடியரசுத் தலை வர் மாளிகையில் இருந்து தகவல் அனுப்பப் பட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்ற வாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தில்லி நீதிமன்றம் புதிய வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதன்படி, ஜனவரி 22 ஆம் தேதிக்குப் பதிலாக, பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு திஹார் சிறை யில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படு கிறது. கருணை மனு நிராகரிக்கப்பட்டாலும், 14 நாட்கள் நோட்டீசுக்குப் பிறகு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், புதிய தேதி நிர்ண யிக்கப்பட்டுள்ளது. திகாரில் சிறை எண்-4 இல்தான் தூக்கு மேடை உள்ளது.குற்றவாளிகள் 4 பேரும் சிறை எண் -4 இல் தனித்தனி அறையில் அடைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.