புதுதில்லி, ஜன.11- நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற இரண்டு குற்றவாளிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் ஜனவரி 14ல் விசாரிக்கவுள்ளது. குற்றவாளிகள் வினய் ஷர்மா (26), முகேஷ் குமார் (32) ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணன், அருண் மிஷ்ரா, ஆர்.எஃப். நாரிமன், ஆர். பானுமதி, அஷோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜனவரி 14ஆம் தேதி 1.45 மணிக்கு விசாரிக்கி றது. வரும் 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், முகேஷ் குமார் மற்றும் வினய் ஷர்மா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதே சமயம், தூக்கு தண்டனை பெற்ற அக்சய் குமார் சிங் (31), பவன் குப்தா (25) சார்பில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை.