tamilnadu

img

வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜேஎன்யு மாணவர்கள் போராட்டம்

தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இன்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
டெல்லியில் உள்ள ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிறன்று இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அமைதி பேரணியில் பங்கேற்றிருந்தனர். அப்போது, முகமூடிகளை அணிந்தபடி வந்த நபர்கள் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி மற்றும் சங் பரிவார் கும்பல், இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து பேரணியில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர்.
இதனைத் தடுக்கச் சென்ற மற்ற மாணவர்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். மாணவர் சங்க தலைவர் ஆய்ஷேகோஷ் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்கு பின் உடனடியாக போராட்டக்களத்தில் திரும்பினார். தாக்குதலை ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு பொறுப்பேற்று  துணைவேந்தர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
நாடு முழுவதும்  உள்ள மாணவர்கள் ஜேஎன்யு மாணவர்கள் தாக்குதலைக் கண்டித்து பல கட்ட போராட்டங்களை  மேற்கொண்டு வருகின்றனர்.  தீபிகா படுகோனே, அனுராக்காஷ்யப், டாப்ஸி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள்  மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  இன்று ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து இன்று தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தில் திரண்ட மாணவர்கள் தாக்குதல் நடத்திய  கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். 
மாணவர்களின் போராட்ட தொடர்ந்து தில்லி காவல் துறையினர் மண்டி இல்லம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து மாணவர்சங்க தலைவர் ஆய்ஷே கோஷ் உள்ளிட்ட மாணவர்கள் மண்டி இல்லம் நோக்கி பேரணியாக செல்கின்றனர். 

 

;