திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

நவி மும்பை அடுக்கு மாடி குடியிருப்பின் 20 வது மாடியில் தீ விபத்து

நவி மும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
நவி மும்பை செக்டார் 44 நேருல் ஸீவுட்ஸ் பகுதியில், பால்ம் கடற்கரை சாலையில் உள்ள மிக உயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 20வது மாடியில் இன்று காலை 6.30 மணிக்கு தீ விபத்து நேரிட்டது.  தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்தில் காயம் அடைந்த தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

;