tamilnadu

img

புதுவை: ஜனவரி 4ஆம் தேதி பள்ளிகள் திறப்பு....

புதுச்சேரி:
புதுச்சேரியில் ஜனவரி 4 ஆம் தேதி தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்திருக்கிறார்.புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கமலக்கண்ணன், “புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் ஜனவரி 4ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. ஜனவரி 4ஆம் தேதியில் இருந்து காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வகுப்புகள் நடைபெறும். அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும்.விருப்பப்படும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். ஜனவரி 18 ஆம் தேதி முதல் முழுமையாக பள்ளிகளை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.மேலும், புதுச்சேரியில் கல்லூரிகளை திறப்பது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.அம்மாநிலத்தில் ஏற்கனவே 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பது நினைவு கூரத்தக்கது.

;