வெள்ளி, மார்ச் 5, 2021

tamilnadu

ஊராட்சி பகுதியில்  கண்காணிப்பு கேமராக்கள்

  பொன்னமராவதி, பிப்.1- புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே காரையூர் ஊராட்சி பகுதியின் முக்கிய வீதிகளில் குற்றச் சம்பவங்க ளை தடுக்கும் விதமாக சுமார் 8 கேமராக்களை ஊராட்சி தலைவர் முகமது இக்பால் தனது சொந்த செலவில் பொருத்தி கண்காணிப்பு அறைகளை அமைத்தார். இலுப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சிகாமணி, அன்ன வாசல் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியார் கேமரா கண்காணிப்பு அறைகளை திறந்து வைத்தனர். ஒன்றிய கவுன்சிலர் வளர்மதி முருகேசன், திமுகவின் பொன்னமராவதி வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து, துணைத் தலைவர் அடைக்கலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;