மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா
புதுக்கோட்டை, ஜன.11- புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பினர் இணை ந்து நடத்திய இந்த விழாவிற்கு பள்ளியின் ஆலோசகர் அஞ்சலி தேவி தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து பேசினார். சிறப்பு விருந்தினர்களாக மகப்பேறு மருத்து வர் ஜெயலெட்சுமி என்ற சுகன்யா, எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக வாய்ப்பாட்டு, கீபோர்டு. கராத்தே, யோகா, பாக்ஸிங், நடனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக முன்னாள் மாண வர் சங்க தலைவர் நவீன்குமார் வரவேற்க, ஆசிரியை ஜெய லெட்சுமி நன்றி கூறினார்.
பொங்கல் பரிசு: மையங்களில் ஆய்வு
தரங்கம்பாடி, ஜன.11- தரங்கம்பாடி பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் மையங்களில் தனி துணை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு பரிசு தொகுப்பினை வழங்கினார். தரங்கம்பாடியில் உள்ள அங்காடி களில் முறையாக பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறதா என பார்வையிட்ட தனி துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்) பி.பாண்டியன், அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பினை வழங்கினார்.