செவ்வாய், ஜனவரி 19, 2021

tamilnadu

ஜன.31 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 புதுக்கோட்டை, ஜன.9- புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜனவரி 31 (வெள்ளிக்கிழமை)அன்று காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.  இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.  எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரி க்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மா வட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

;