புதுக்கோட்டை:
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டம் மாநிலத் தலைவர் எஸ்.ரத்தினமாலா தலைமையில் புதன்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் டி.டெய்சி, பொருளாளர் எஸ்.தேவமணி ஆகியோர் அறிக்கைகளை முன்மொழிந்து பேசினர். சிஐடியு பொறுப்பாளர் கோபிகுமார் வாழ்த்துரை வழங்கினார். மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களைபணிநிரந்தரம் செய்ய வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் போது ஒட்டுமொத்தப் பணிக்கொடையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 20, 21 தேதிகளில் வட்டாரஅளவிலும், 29-ஆம் தேதி மாவட்ட அளவிலும், பிப்ரவரி 5 ஆம் தேதி மாநில அளவிலும் போராட்டங்களை நடத்துவது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
படம் : கோப்பு