பாட்னாவில் மகளிர் கல்லூரியில் புர்கா அணிய கல்லூரி நிர்வாகம் தடை விதித்துள்ளது
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஜே.டி மகளிர் கல்லுரியில் புர்கா அணிய கல்லூரி நிர்வாகம் தடை விதித்துள்ளது. அனைத்து மாணவர்களும் சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் கல்லூரி நிர்வாகம் பரிந்துரைத்துள்ள ஆடைக்குறியீட்டை கடைபிடிக்கவேண்டும். இந்த விதிமுறைகளை மீறினால் ரூ 250 அபராதம் விதிக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கல்லூரியின் இந்த கட்டுப்பாடு மாணவிகளின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.