tamilnadu

img

தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகம்: அமைச்சர்

சென்னை,ஜன.24- நாட்டிலேயே தமிழ கத்தில்தான் பெண் குழந்தை களின் பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரி வித்துள்ளார். தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சென்னை பெசன்ட்  நகர் கடற்கரையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை  சுகா தாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தொடங்கி வைத்தார்.  முன்னதாக அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகை யில், இந்திய அளவில் ஆயிரம்  ஆண்களுக்கு 914 பெண்கள் என உள்ள நிலையில், தமிழகத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 943 பெண்கள் எனும் அளவில் பிறப்பு விகிதம் உள்ளது. இந்த விகிதத்தை மேலும் அதிகரிக்கச் செய்ய அரசு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரி வித்தார்.

;