செவ்வாய், மார்ச் 2, 2021

tamilnadu

img

மலைவாழ் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

உதகை, ஜூலை 22 - நீலகிரி மாவட்டம், மேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பால்மாறாலீஸ், மூப்பர்காடு, ஊஞ் சலற்கொம்பை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு  கபசுர குடிநீர் பொடி  மற்றும் ஆர்சானிக் ஆல்பம் 30 என்ற ஓமி யோபதி மருந்து ஆகியவற்றை தமிழ்நாடு  மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வழங்கினர்.

அதேபோல் பழனியப்பா டீ எஸ்டேட் மற்றும் சுல்தானா டீ எஸ்டேட் தோட்டத் தொழிலாளி களுக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்சியினை மாவட்ட கரு வூலக அலுவலர் துவக்கி வைத்தார்.

பழனி யப்பா டீ எஸ்டேட் நிர்வாகத்தின் இயக்குநர் அஸ்வின் குமார் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.அடை யாளகுட்டன், பொருளாளர் ஏ.குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கி.முத்துக்குமார், சமூக ஆர்வலர் ஆர்.பத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

;