tamilnadu

img

பாஞ்சாங்குளம் பள்ளி மாணவர்களுக்கு நடந்த தீண்டாமை கொடுமை - 2 பேர் கைது

பாஞ்சாங்குளம் பள்ளி மாணவர்களுக்கு தின்பண்டம் தர முடியாத என்று கூறிய கடைக்கு சீல் வைக்கப்பட்டு, இந்த விவகாரத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெரும்புத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாஞ்சாங்குளம் கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தின்பண்டம் வாங்குவதற்காகக் கடைக்கு சென்றனர். அப்போது ஊர்க்கட்டுப்பாடு விதிகளின் படி, இனி உங்கள் தெருவைச் சேர்ந்தவர்களுக்கு தின்பண்டம் தர முடியாது என்றும், வீட்டில் சென்று இதனைச் சொல்லுமாறும் கடை உரிமையாளர் கூறினார். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கடைக்கு சீல் வைத்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 

;