திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

திருவள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தருமபுரி, நவ.11, திருவள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார் பட்டியில் அய்யன் திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசி அவமதித்து உள்ளனர்.  மேலும், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தோர் திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்து திருநீறு பூசி அவமதித்து உள் ளனர்.  இச்செயலை கண்டித்தும்,  இச் செயலில் ஈடுபட்டோரை கைது செய்திட வலியுறுத்தியும் திங்களன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தரும புரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் த.ஜெயந்தி தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன், கிழக்கு மாவட்ட செயலாளர் ஜானகிராமன், மாநில செயற்குழு உறுப்பினர் இராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

இதேபோல், சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட பொருளாளர் காஜா மைதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மண் டல செயலாளர் நாவரசன், வசந்த், வேலு, உள்ளிட்ட திரளானோர்  கலந்து கொண் டனர். இதையடுத்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

;