tamilnadu

சச்சின் டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடக்கம் பிப்ரவரி 23 வரை நடக்கிறது

தூத்துக்குடி, டிச.29- தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் சச்சின் டி20 கிரிக்கெட் கமிட்டியினர் இணைந்து நடத்தும் சச்சின் டி20 கிரிக்கெட் போட்டிகள் அழகர் பப்ளிக் ஸ்கூல் மைதானத்தில் தொடங்கப்பட்டது.  போட்டிகளை அழகர் குரூப் ஆப் கம்பெனி சேர்மன் ஜெயராமன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஆல்பர்ட் முரளிதரன், துணைச் செயலாளர் எஸ்டிஆர் சாமுவேல் ராஜ், கவுரவச் செயலாளர் சிவகுமாரன்,  இணைச் செயலாளர் கிறிஸ்பின் ஆகியோர் உடனிருந்தனர்.  இந்த இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் டிசம்பர் 28 முதல் பிப்ரவரி 23, 2020 வரை நடைபெறுகிறது. போட்டியில் 14 அணிகள் பங்கு பெறுகின்றன. தூத்துக்குடி, திருச்செந்தூர் கோவில்பட்டி, சாத்தான்குளம், திருவைகுண்டம் போன்ற பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என 200-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு அணிக்கும் தலா ஆறு லீக் போட்டிகள் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும். பின்னர் நாக் அவுட் முறையில் போட்டிகள் தொடரும்.  இந்தப் போட்டிகள் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தோறும் நடைபெறும். பிப்ரவரி 23ஆம் தேதி இறுதி ஆட்டம் நடைபெறும்.