tamilnadu

திருவாரூர், தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

மருத்துவ பரிசோதனை முகாம்
மன்னார்குடி, ஆக.22-இந்தியன் வங்கியின் 113-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, மன்னார்குடியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாமை தனியார் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தியது. கடந்த 1907 ம் ஆண்டு இந்தியன் வங்கி தொடங்கப்பட்டு 113 வது ஆண்டை தொடங்கியது. இதையொட்டி மன்னார்குடி காந்தி சாலையில் உள்ள இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு இல வச மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தியது. முகாமை இந்தியன் வங்கியின் திருவாரூர் மண்டல மேலாளர் ராஜாமணி தொடங்கி வைத்தார். மண்டல துணை மேலாளர் செல்வநாயகம் மன்னார்குடி இந்தி யன் வங்கி கிளை மேலாளர் கலா உள்ளிட்ட வங்கி அதி காரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். முகாமில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.

மனிதக் கடத்தல் தடுப்பு கருத்தரங்கம் 
தஞ்சாவூர், ஆக.22-தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஆட்சியர் அலுவலகத்தில் மனிதக் கடத்தலை தடுத்தல் குறித்த கருத்தரங்கம், மாவட்ட முதன்மை நீதி பதி வி.சிவஞானம் தலைமையில் புதன்கிழமை நடை பெற்றது.ஆட்சியர் ஆ.அண்ணாதுரை முன்னிலை வகித்தார். இதில் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நபர்க ளுக்கான ஒருங்கிணைந்த உதவும் குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். குழுவில் மாவட்ட சட்டப்பணி கள் ஆணைக்குழு செயலாளர், மாவட்ட வருவாய் அலு வலர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், தொழிலா ளர் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு இணை இயக்குனர் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.  கூட்டத்தில், மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.எழிலரசி, கூடுதல் மாவட்ட நீதிபதி கே.கருணாநிதி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், தன் னார்வலர்கள் ஜெனிபா பிரித்தா, ஹென்னா டேனியல் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதி பதி சுதா வரவேற்று பேசினார். நிறைவாக கும்பகோணம் முதன்மை நீதித்துறை நடுவர் எஸ்.மாதவ ராமானுஜம் நன்றி கூறினார்.

நீர் பாதுகாப்பு கிராம சபைக் கூட்டம் 
திருவாரூர், ஆக.22-திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சி களிலும் நீர் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் வரும் 24-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. மழைநீர் சேகரிப்பு, பாரம் பரிய மிக்க நீர்நிலைகளை புனரமைத்து பாதுகாத்தல் உள்ளிட்டவை விவாதிக்கப்பட உள்ளது. இதில் பொது மக்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாம் என ஆட்சி யர் த.ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

;