tamilnadu

img

திருத்துறைப்பூண்டியில் விவசாயிகளுக்கு ஆதரவாக 232 டிராக்டரில் 2500 பேர் பேரணி அணிவகுப்பு....

திருத்துறைப்பூண்டி:
வேளாண் விரோத சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடுகிற விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெறாமல் விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசையும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க அரசையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியக்குழு சார்பில் கச்சனம் கடைத்தெருவிலிருந்து 232 டிராக்டருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் 2500-க்கும் மேற்பட்டோர் அணிவகுத்த நடைபயண பேரணி வியாழனன்று கச்சனம் கடைத்தெருவி லிருந்து துவங்கியது. அவர்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் 4 மணிநேரம் நடந்து வந்து திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.என்.முருகானந்தம் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி பேரணியை துவக்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.மாரிமுத்து கண்டன உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், வி.தொ.ச மாவட்ட செயலாளர் ஆர்.குமாரராஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.பி.கே.பாண்டியன், எஸ்.சாமிநாதன், கே.பி.ஜோதிபாசு, வடக்கு ஒன்றிய செயலாளர் வி.டி.கதிரேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.இராமச்சந்திரன், எஸ்.முத்துகுமாரசாமி, எஸ்.எஸ்.பாலகுரு, ஏ.முருகானந்தம், எம்.முருகதாஸ், எஸ்.சேகர், பி.மாதவவேலன், ஆர்.நிர்மலா, கோமல் ஊராட்சி தலைவர் பத்மினி ஜீவானந்தம், கிளை செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் என 2500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

இந்த நடைபயண பேரணியால் சுமார் 4 மணி நேரம் சாலைகள் ஸ்தம்பித்தன. திருத்துறைப்பூண்டி மக்கள் மத்தியிலும், அனைத்து அரசியல் கட்சியினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது இந்த பேரணி. காவல் துறையினர் நான்கு இடங்களில்பேரணியை தடுத்து நிறுத்தியும் அதையும் மீறி தொடர்ந்து பேரணி நடைபெற்றது.