tamilnadu

திருவள்ளூர் முக்கிய செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று குறைதீர் கூட்டம் 
திருவள்ளூர் ஜன-5 மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று (ஜன.6) முதல் வழக்கம் போல் நடைபெறும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஷ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டதால், ஜன-6 அன்று முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட ஆட்சித் தலைவர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும். பொது மக்கள் தங்களது கோரிக்கை சம்மந்தமான மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரில் அளித்து பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

மர்ம நோயால் நெற்பயிர்கள் கருகின: விவசாயிகள் அதிர்ச்சி 
 திருவள்ளூர் ஜன-5 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அரசூர். காட்டூர். ஐ நல்லூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பிபி டி . ரக விதை நெல்லை பயன்படுத்தி சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில் செம்மை நெல் சாகுபடி செய்திருந்தனர்.  நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்து இன்னும் ஒரு வார காலத்தில் அறுவடை செய்ய இருந்த நிலையில் திடீரென பரவிய மர்ம நோயால் நெற்பயிர்கள் மெல்ல மெல்ல கருகத் தொடங்கியது. இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற விவசாயிகள் அவர்களின் அறிவுறுத்தலின்படி பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தனர். ஆனால் நோய் கட்டுக்கடங்காமல் மளமள வென பரவியதால் நெற்பயிர்கள் முழுவதும் கருகி நெல் மணிக்குள் அரிசி இன்றி வெறும் பதராக  அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் வேறுவழியின்றி கருகிய நெற்பயிர்களை அறுவடை செய்துள்ளனர்.  பதராக மாறியதை மூட்டை மூட்டையாக கட்டி எரி ஊட்டுவதற்காக செங்கல் சூளை களுக்கு இலவசமாக அனுப்பி வைத்தனர் . மனைவி மக்களின் நகைகளை அடகு வைத்தும் கடன் வாங்கியும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20ஆயிரம் வரை செலவு செய்து அல்லும் பகலும் பாடுபட்டு வளர்த்த நெல்மணிகள் அறுவடைக்கு பின்னர் களத்து மேட்டிற்கு வருவதற்கு முன்பாக கருகியதால் கலங்கி நிற்கும் விவசாயி கள் ஏற்கனவே 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான காப்பீட்டுத் தொகையை தங்களுக்கு இதுவரை கிடைக்காத நிலையில் தற்போது தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறி யாகி விட்டதாகவும் இதிலிருந்து மீண்டுவர அரசு தற்போதைய காப்பீட்டுத் தொகையுடன் நிலுவையிலுள்ள காப்பீட்டு தொகையையும் சேர்த்து வழங்கவேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;