திருவண்ணாமலை மாவட்டம் சிறுநாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஊர்த்தலைவர் சித்ராபரந்தாமன் தலைமையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் உதவி கல்வி அலுவலர் ஸ்ரீராமுலு தேசியக்கொடியை ஏற்றி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்புறையாற்றினார். தமிழாசிரியர் சி .ஏ. முருகன் வர வேற்றார். முன்னாள் மாணவர் ப.வடிவேலு 29 வது ஆண்டாக பள்ளியில் படிக்கும் மாணவர்களில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்கள், பேனா, அடிக்கோல், பெட்டி பென்சில், கணித உபகரணபெட்டி உள்ளிட்ட பொருட்களை பரிசாக வழங்கினார். தொடர்ந்து 8வது ஆண்டாக சு.தமிழரசன் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்களும் பேனாவும் வழங்கினார். இறுதியாக தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.