திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் தென் பள்ளிப்பட்டு கிராமத்தில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் பி.கே முருகன், கலசபாக்கம் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுப்பிரமணி ஆகியோரை ஆதரித்து திமுகவின் மாவட்ட நிர்வாகி டாக்டர் எ.வ.கம்பன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திமுக, சிபிஎம் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
******
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ராஜபிரியாவிற்கு கட்சி யின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கற்பனைச் செல்வம், சுனில் குமார் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு சுத்தி யல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.