செவ்வாய், செப்டம்பர் 21, 2021

tamilnadu

img

நல்ல பாம்புக்கு 22 தையல்


திருவண்ணாமலை, ஜன.11- திருவண்ணாமலை - போளூர் சாலை, ஈசான்யலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நகராட்சி பொது கழிவறை அருகே சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று  அடிபட்ட நிலையில் சாலையை கடக்க மெதுவாக ஊர்ந்து சென்றது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திருவண்ணாமலை வனத்துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த வன பாதுகாவலர்கள் ராஜேஷ் மற்றும் பாலாஜி ஆகியோர் பாம்பை பிடித்து திருவண்ணாமலை- செங்கம் சாலையில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த பாம்புக்கு அடிபட்ட இடத்தில் 22 தையல் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

;