tamilnadu

img

நாட்டை விற்பதற்காக மக்களை பிளவுபடுத்தும் மோடி அரசு வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா சாடல்

திருப்பூர், பிப். 20 - நாட்டின் செல்வங்களை தனியார் கார்ப்ரேட் முதலாளிகளுக்கு விற் பனை செய்வதற்காக மக்களைப் பிளவு படுத்தும் செயலில் மத்திய மோடி அரசு ஈடுபட்டுள்ளதென்று என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.பாலா கூறினார். சென்னை வண்ணாரப்பேட்டை யில் ஜனநாயகமுறைப்படி போராட் டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது கொடூரத் தாக்குதலை நடத்திய காவல் துறை ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதி ராக தீர்மானம் நிறைவேற்றவும் வலி யுறுத்தியும், திருப்பூர் மாவட்டம், செல் லாண்டியம்மன் துறை அருகே இளை ஞர்கள் கூட்டமைப்பு மற்றும் குடியு ரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் தொடர் தர்ணா போராட்டம் கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் பங்கேற்று வாலிபர் சங்க மாநிலச் செய லாளர் எஸ்.பாலா வாழ்த்திப் பேசி னார். அப்போது அவர் கூறியதா வது: ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடினால், கேள்வி எழுப்பினால் அவர்களை கைது செய்து சிறையில் தள்ள வேண்டுமென்ற அடக்குமு றையை பாஜக அரசு ஏவி வருகிறது. வாலிபர் சங்கத்தின் மீது எண்ணற்ற வழக்குகள் உள்ளன. மாநிலச் செயலா ளரான என் மீது ஐந்து வழக்குகள் உள்ளன. சில தினங்களுக்கு முன்பு மதுரை காவல் துறையினர் என்னை  தொடர்பு கொண்டு எங்கே இருக்கி றீர்கள் சம்மன் கொடுக்க வேண்டும் என்றனர். வெளியூரில் இருப்பதால் வருவதற்கு மூன்று நாட்கள் ஆகும் என்று பதில் கூறினேன். இந்நிலை யில், மாநகர காவல் ஆணையரே கூறியதாக உடனடியாக வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், எனவே உடனே சம்மன் கொடுக்கச் சொன்னதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இது புது வழக்கமாக இருக்கிறதே என்று கேட்ட போது, மேலே இருந்து உத்தரவு என்றனர். மேலே இருந்து என்றால் உள்துறையே போராட்டங்களை, போராடுவோரை ஒடுக்குவதற்காக உத்தரவு போடுகிறது. குடியுரிமைச் சட்டம் நல்லது, இதில் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு இல்லை, அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட் டால் நானே நேரில் களத்தில் நிற் பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி னார். ஆனால் சென்னை வண்ணாரப் பேட்டையில் அமைதியான போராட் டத்தில் தடியடி வன்முறை நடத்திய தில் இஸ்லாமியர்கள் பாதிக்கப் பட்டார்களே, ரஜினிகாந்த் எங்கே? அவரைக் காணவில்லை என்று தேட வேண்டியிருக்கிறது. சிங்கப்பூரில் ஏழு சதவிகிதம் வரி வசூலித்து கல்வி, மருத் துவம் தர முடிகிறது, இங்கே 23 சதவி கிதம் வசூலித்துவிட்டு ஏன் கல்வி மருத் துவம் தர முடியாது என்று கேள்வி எழுப் பினால் நடிகர் விஜய் மீது வருமான வரித் துறை சோதனை ஏவப்படுகி றது. ஆனால் மத்திய அரசின் குடியு ரிமை திருத்தச்  சட்டத்தை ஆதரித்துப் பேசினால் ரஜினிகாந்த் வருமான வரி அபராதம் குறைக்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ செல்போனுக்கு விளம்பரதாரராக பிர தமர் மோடி காட்சியளித்தார். பிஎஸ் என்எல் மூடப்படும் நிலைக்குத் தள்ளப் பட்டு விட்டது. உலகம் முழுவதும் ஏர் இந்தியா விமானத்தில் மோடி சுற்றுப்ப யணம் மேற்கொண்டார். ஆனால், இந்தியாவில் ஏர் இந்தியா நிறுவனம் விற்பனை செய்யப்படுகிறது. ரயில் வேயை தனியாருக்குத் தர முடிவு செய்துவிட்டனர். தில்லி மெட்ரோவில் விமான நிலையம் செல்லும் தடத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கொடுத் துவிட்டனர். ஆயுஷ்மான் பாரத் எனச் சொல்லி எல்லோருக்கும் மருத் துவக் காப்பீடு எடுங்கள் என பிரத மர் மோடி சொன்னார், இப்போது எல் ஐசி காப்பீட்டு நிறுவனத்தை விற் பனை செய்ய முடிவு செய்கின்றனர். பிரதமர் மோடி எதில் எல்லாம் பேசு கிறாரோ, அவை எல்லாம் விற்கப்ப டுகின்றன. பிஎஸ்என்எல், ரயில்வே,  காப்பீடு என நாட்டின் செல்வத்தை, வளங்களை கார்ப்ரேட்டுகளுக்கு விற் பனை செய்கின்றனர். இதை எதிர்த் துக் கேள்வி கேட்கக் கூடாது, போரா டக் கூடாது என்பதற்காக, பிரச்ச னையை திசை திருப்புகின்றனர். 45 ஆண்டுகளில் இல்லாத அள வுக்கு வரலாறு காணாத வேலை இன்மை நிலவுகிறது என தேசிய சாம்பிள் சர்வே நிறுவனம் தெரிவிக் கிறது. அதற்கு தீர்வு காண்பதற்கு பதி லாக மக்களை உணர்வுரீதியாக தூண் டிவிட்டு பிளவுபடுத்தி ஒற்றுமையைச் சீர்குலைக்கும் காரியத்தில் ஆட்சியா ளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந் தியர்கள் நாங்கள், எங்கள் சகோதரர் களை ஒருபோதும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம், அடக்குமு றையை ஏவும் சர்வாதிகாரிகள் தோல்வி அடைவார்கள் என்பதே வர லாறு. மக்கள் ஒற்றுமையைக் காத்து, இந்த தேசத்தைப் பாதுகாப்போம். குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப் புப் போராட்டம் நாடு முழுவதும் நடை பெற்றாலும், காவல் துறை துப்பாக்கி சூடு தாக்குதலில் உயிரிழப்பு சம்பவங் கள் பாஜக ஆளும் மாநிலங்களான உ.பி., கர்நாடகம், அஸ்ஸாம் மாநிலங் களில்தான் நடைபெற்றது. அதற்கு அப் பால் தமிழகத்தில் தான் வண்ணாரப் பேட்டையில் ஒருவர் பலியாகி இருக்கி றார். இப்போது குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தைக் கண்காணிக்க 6 பேர் குழு அமைக்கி றார்களாம். ஆறு பேர் அல்ல 60 லட்சம் பேர் குழு அமைத்தாலும் 8 கோடி தமி ழக மக்கள் ஒன்றுபட்டு நின்று இந்த சட்டத்தை பின்வாங்கச் செய்வார்கள்.  டிஎன்பிஎஸ்சி தேர்வில் 30 லட்சம் பேர் பல்வேறு சிரமங்களுக்கு இடையே கனவுகளோடு பங்கேற்ற னர். அதில் ஊழல் செய்து மோசடியில் ஈடுபட்டவர்களைக் கண்காணிக்க குழு அமைக்க வேண்டியதுதானே?  வீரமரணம் அடைந்த பகத்சிங்கின் வாரிசுகளாக நாங்கள் ஒன்றுபட்டு பிள வுவாத சக்திகளை முறியடிப்போம், இந்தியாவையும், இந்திய மக்களை யும் காப்போம். இவ்வாறு எஸ்.பாலா பேசினார்.  முன்னதாக புதனன்று ஐந்தாம் நாள் போராட்டத்தில் கிறிஸ்துவ திருச்ச பையின் சார்பாக வில்லியம்ஸ், திருப் பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சார் பாக மௌலவி ரியாஜ்தீன் இம்தாதி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் அஸ்லம், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங் கத்தின் சார்பில் எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா, டிஏஜிஎச் சார்பில் ஜமேஷா, திருப்பூர் அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்ராம், மதிமுக மாநகரச் செயலா ளர் சு.சிவபாலன், தமிழக மக்கள் ஜன நாயக கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் க.இராஜசேகர், இலக்கு 2040 அமைப்பின் ஒருங்கிணைப்பா ளர் சுடலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த வளர்மதி, சமூக செயற்பாட்டாளர் பேராசிரியர் சுந்தர வள்ளி ஆகியோர் இப்போராட்டத்தை ஆதரித்து உரையாற்றினர். ஒவ்வொரு நாளும் இரண்டாயிரத்திற்கும் மேற் பட்டோர் இந்த போராட்டத்தில் பங் கேற்று வருகின்றனர்.

;