திருப்பூர், ஜன. 22 – திருப்பூரில் விவசாயிகள் குறை தீர்க்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், கோட்டாட்சியர் அலுவலகத்திலும் வெள்ளி யன்று ஒரே நாளில் இரு கூட்டங்கள் நடத் தப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்ட அளவிலும், கோட்ட அளவிலும் மாதந்தோறும் விவ சாயிகள் குறை தீர்க்கூட்டம் நடத்தப் படுகிறது. மாவட்ட அளவிலான விவசாயி கள் குறை தீர்க்கூட்டங்கள், மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைகளில் நடத்தப் படுவது வழக்கம். அதேசமயம் அதற்கு முந்தைய வாரத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கூட்டம் நடத்தப் படும். அந்தந்த கோட்ட அளவிலான கூட்டங் களில் விவசாயிகள் தெரிவிக்கும் புகார் கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக் கப்படாதபோது, மாவட்ட அளவிலான கூட்டங்களில் விவசாயிகள் இப்பிரச்ச னையை எழுப்பி தீர்வு காண முடியும். இத னால்தான் கோட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் நடத்தப்படும் கூட்டங்கள் ஒரு வார காலம் அல்லது குறிப்பிட்ட நான் கைந்து நாட்கள் இடைவெளியில் நடத்தப் படுகிறது. ஆனால் ஜனவரி மாத விவசாயிகள் குறை தீர்க்கூட்டம் திருப்பூர் மாவட்ட அளவிலும், திருப்பூர் கோட்ட அளவிலும் ஒரே நாளில் அதாவது 24ஆம் தேதி வெள்ளிக் கிழமை நடத்தப்படுகிறது. கோட்டாட்சியர் அலுவலகத்தில் அன்று காலை 11 மணிக்கும், மாவட்ட ஆட்சியரகத்தில் பிற் பகல் 3.30 மணிக்கும் கூட்டம் நடைபெறும் என தனித்தனியாக செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளனர். இதுவரை இல்லாத நடைமுறையாக இம்முறை ஒரே நாளில் கூட்டம் நடத்தப்படுவது விவசாயிகளுக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடை முறை சரியானதல்ல, கோட்ட அளவில் தீர்வு காணாதபோது, மாவட்ட அளவிலான கூட்டங்களில் முறையிட முடியும். ஒரே நாளில் இரு கூட்டங்களை நடத்தினால் இது எப்படி சாத்தியமாகும் என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே இந்த நடைமுறையை மாற்றி வரக்கூடிய வாரம் கோட்ட அளவில் நடத்தினால், கடைசி வெள்ளிக்கிழமையான ஜனவரி 31ஆம் தேதி மாவட்ட அளவிலான கூட் டத்தை நடத்தலாம். ஒரே நாளில் இரு கூட்டம் நடத்துவதை எதிர்காலத்தில் எக்காரணத்தைக் கொண்டும் தொடரக் கூடாது என்றும் விவசாயிகள் கூறு கின்றனர்.