அவிநாசி மே 14- அவிநாசி அருகே தெக் கலூர் அருகே மர்மமான முறையில் மயில்கள் இறந்து கிடந்தது தொடர் பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். அவிநாசி ஒன்றியத் திற்குட்பட்ட தெக்கலூர் மூலக்காடு பகுதியில் 2 பெண் மயில்கள் மர்மமான முறையில் இறந்துகிடந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் வனத்துறையினருக்கு தக வல் அளித்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறை யினர் இறந்து கிடந்த இர ண்டு மயில்களையும் எடுத் துச் சென்று கால்நடை மருத் துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்தனர். இதன்பின் வனத்துறை யினர் கூறுகையில், மயில் கள் பறந்து வரும்போது சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் மோதி இறந் திருக்கலாம் என கருது கிறோம். இருப்பினும் இது தொடர்பாக விசாரித்து வரு வதாக தெரிவித்தனர்.