வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா தேர்தல் ஆணையம் பாராமுகம்
அவிநாசி, டிச. 29- அவிநாசி ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடப்பதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ள வில்லை என புகார் எழுந்தது. அவிநாசி ஒன்றியத்தில் இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் கருவலூர், வேலாயுதம் பாளையம், ராமநாதபுரம், நம்பியாபாளையம், பழங்கரை, வடுகபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கா ளர்களுக்கு பணம், மது பாட்டில்கள், கறி விருந்து உள்ளிட் டவை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இது குறித்து பொதுமக்கள் அவிநாசி தேர்தல் ஆணையரிடம் புகார் தெரிவித்தால் எந்த நடவடிக்கையுமில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஈஸ்வரன் கூறுகையில், பண பலம், அதிகார பலம், இருக்கும் நபர்கள் மட்டுமே உள்ளாட் சித் தேர்தலில் எந்த தடையுமின்றி நடைபெற்று வருகிறது. குறிப்பாக கட்சி பிரமுகர்கள் கொடி கட்டிய கார்களில் மது பாட்டில் வினியோகம் நடைபெறுகிறது. தேர்தல் ஆணை யத்தில் புகார் தெரிவித்தால் கண்டு கொள்வதில்லை. அவி நாசி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறை யில் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என கூறினார்.
கார் கம்பெனி மேலாளர் மரணம் கொலை வழக்கில் 4 பேர் கைது
நாமக்கல், டிச. 29- நாமக்கல் அருகே கொலை வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்துள்ள அனியா புரத்தை சேர்ந்தவர் பரணிதரன் (46). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கார் கம்பெனியில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 17ஆம் தேதி புதன் சந்தையில் இருந்து சேந்தமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அண்ணா நகர் ரயில்வே பாலம் அருகே சென்றபோது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த சண்முக வடிவு என்பவர் மீது மோதியது. இந்த விபத்து குறித்து சண்முகவடிவு அவரது கணவரான வனவர் பாலசுப்ரமணி யத்திடம் தெரிவித்தார். உடனடியாக பாலசுப்ரமணியம் அவரது நண்பர்கள் கமலகண்ணன், சிவபாலன், நாமக் கல்லை சேர்ந்த ஹீமாயூன் ஆகியருடன் சம்பவ இடத்திற்கு வந்து பரணிதரனை சரமாரியாக தாக்கினர். இதில், படுகா யமடைந்த பரணிதரன் பெங்களூரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து பரணிதரன் சேந்தமங்கலம் காவல் துறை யினரிடம் அளித்த புகாரின் பேரில் கமலகண்ணன் உட்பட 3 பேரை அடிதடி வழக்கில் கைது செய்தனர். மேலும், தலை மறைவான பாலசுப்ரமணியத்தை தேடி வந்தனர். இந்நிலை யில் சிகிச்சை பெற்று வந்த பரணிதரன் சிகிச்சை பலனிற்றி சனியன்று உயிரிழந்தார். இதனையடுத்து காவல் துறை யினர் கொலை வழக்காக மாற்றி தலைமறைவாக இருந்த பாலசுப்ரமணியத்தை கைது செய்து சேலம் மத்திய சிறை யில் அடைத்தனர்.