சீர்காழி, ஏப்.4- நாகை மாவட்டம் புத்தூரில் கடைவீதியையொட்டி பழைய பாளையத்தான் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு இப்பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும்சாக்கடை நீர் தேங்கியுள்ளது. இந்நீரில் குவியல் குவியலாக பிளாஸ்டிக் பொருட்களும்,அப்பகுதியில் உள்ள குப்பைகளும், அழுகிய பொருட்களும் கொட்டப்படுவதால் சாக்கடை நீர் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் 3 அடி ஆழத்திற்கும் வடிய வாய்ப்பின்றிதேங்கியே கிடப்பதால் அதிக எண்ணிக்கையில் புழுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகின்றன. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் கெடுவதுடன் அங்கு குடியிருப்போர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே பழையபாளையத்தான் வாய்க்காலில் தேங்கியுள்ள சாக்கடை நீரைஅகற்றி, வாய்க்காலை தூர்வாரி ஆழப் படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.