திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

தரங்கம்பாடி மற்றும் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

பள்ளியில் கல்விக் கட்டணம் பெயரில் வசூல் வேட்டை

தரங்கம்பாடி, ஜூன் 27- நாகை மாவட்டம் பொறையார் அருகேயுள்ள தில்லை யாடியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த பல ஆண்டுகளாக குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பொறுப்பாளர்களாக உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என மாவட்ட கல்வித் துறைக்கு தில்லையாடியை சேர்ந்தவரும், பெற்றோர் ஆசிரி யர் கழக உறுப்பினர் பாலசுப்பிரமணியன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.  மேலும் கல்விக் கட்டணம் என்ற பெயரில் ரூ.2 ஆயிரம் முதல் ஆயிரம் வரை ஏழை மாணவர்களிடம் வலுக்கட்டாய மாக வசூல் செய்வதாகவும், பள்ளியில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. மாணவர்களின் பெற்றோர் அல்லாத வர்களே தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பா ளர்களாக தொடர்ந்து நீடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறினால் போராட்டங்கள் நடத்தப்படும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

புயல் மறுசீரமைப்பு பணிகள் ஆய்வு 

தஞ்சாவூர், ஜூன் 27- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் ஒரத்தநாடு வட்டங்களில் நடைபெற்று வரும் மறுகட்டமைப்பு, மறு வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக கஜா புயல் திட்ட கூடுதல் இயக்குநர் ராஜகோபால் சுங்காரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றி யம் இரண்டாம்புலிக்காடு கிராமத்தில் புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் கட்டப்படுவது உள்ளிட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வில் சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;