வாகனத் திருட்டு: முதியவர் கைது
தரங்கம்பாடி, ஜன.24- நாகை மாவட்டம் திருக்கடையூரில் பொறையார் காவல்துறையினர் சம்பவத் தன்று வாகன சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்த தில் உரிய ஆவணம் இல்லை என்பதும் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசிய தால் அவரிடம் தொடர் விசாரணை மேற் கொண்டனர். இதில் அவர், காரைக்காலை சேர்ந்த ரிச்சர்ட் பான்ட்லே டி-சில்வா (62) என்ப தும், இவர் கடந்த பல மாதங்களாக பொறையாறு, காரைக்கால், தரங்கம் பாடி, ஆயப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி விற் பனை செய்து வந்தது தெரிந்தது. அத னைத் தொடர்ந்து டி-சில்வாவை கைது செய்து, 4 மோட்டார் சைக்கிள்களை பறி முதல் செய்தனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் இடம் மீட்பு
தஞ்சாவூர், ஜன.24- தஞ்சாவூர் மாவட்டம் ஆத்தாளூர் வீர காளியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடம் பூக்கொல்லை கடைவீதிக்கு அருகே உள்ளது. இந்த இடத்தில் பல வருடங்கள் குடியிருந்து வந்தவர், அந்த இடம் தனக்கு சொந்தமானது என்று கூறி கோயிலுக்கு குத்தகை தர மறுத்தார். இதுகுறித்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை, அந்த இடம் கோயி லுக்குச் சொந்தமானது. உடனடியாக வீடு, வயல் ஆகிய ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில் வசம் ஒப்படைக்க வேண்டுமென கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு கோயில் நிர்வாகத்திடம் நீதிமன்ற அலுவலர்கள் ஒப்படைத்தனர்.
மானிய விலையில் பருத்தி விதைகள்
சீர்காழி, ஜன.24- நாகை மாவட்டம் கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் கூறுகையில், கொள்ளிடம் வட்டார விவ சாயிகளுக்கு வழங்க சுரபி மற்றும் சூரஜ் ஆகிய பருத்தி ரக விதைகள், கொள்ளி டம் எருக்கூர், வடகால், முதலைமேடு ஆகிய வேளாண் விரிவாக்க மையங்க ளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் பருத்தி விதைகளை 50 சதவிகித மானிய விலையில் வாங்கி பயனடையலாம் எனத் தெரிவித்தார்.
இலவச வேட்டி- சேலை வழங்கல்
சீர்காழி, ஜன.24- நாகை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூரில், தொடக்க வேளாண் கூட்டு றவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடையில் நுகர்வோர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி தலைவர் முத்தமிழ்ச் செல்வி சுப்பையா, பயனாளி களுக்கு வேட்டி சேலை வழங்கினார். துணைத் தலைவர் விஜி, கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் முத்துக்குபேரன், ஆதிமோகன், கமலகாசன், வி.ஏ.ஓ வீரபாண்டியன், மன்ற உறுப்பினர்கள் மைனாவதி, மேரிகிளாரா, ஆரோக்ய மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்க கிளை அமைப்பு
சீர்காழி, ஜன.24- நாகை மாவட்டம் சீர்காழியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் சார்பில் கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலை வர் சரவணன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமசாமி நெடுஞ்செழியன் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.என்.எஸ்.டி.சி. மாவட்ட தலைவர் கண்ணன் மீன்பிடி சங்க மாவட்ட செய லாளர் சி.வி.ஆர். ஜீவானநந்தம் வி.ச. வட்ட செயலாளர் கே. நாகையா உள் ளிட்டோர் சிறப்புரையாற்றினர். சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பெண் குழந்தைகள் தின விழா
அறந்தாங்கி, ஜன.24- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், ஜேசிஜ சென்ட்ரல் சார்பாக வளர்மதி கல்லூரி யில் தேசிய பெண் குழந்தைகள் தினம் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு ஜேசிஜ தலைவர் மகா. பாரதிராஜா தலைமை வகித்தார். டாக்டர் சுரேஷ், நவீன்குமார், ஜேசிஜ துணை தலைவர் முகம்மது யூசுப் ஆகியோர் கலந்து கொண்ட னர். ஜேசிஜ. துணை தலைவர் குருமூர்த்தி பேசி னார். நிறைவாக ஜேசிஜ செயலாளர் வினோத் நன்றி கூறினார்.
விழிப்புணர்வு பேரணி
சீர்காழி, ஜன.24- நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் வாக்காளர் தின விழிப்புணார்வு பேரணி நடைபெற்றது. பேரணியை சீர்காழி தாசில்தார் சாந்தி துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் லெட்சுமி, கொள்ளிடம் ஆய்வாளர் வனிதா, ஊராட்சி தலைவர் வசந்தி ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி கல்லூரி யிலிருந்து துவங்கி புத்தூர் கடைவீதி வழி யாகச் சென்று மீண்டும் கல்லூரியை வந்து நிறை வடைந்தது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கருப்பு பட்டை அணிந்து மாணவர்கள் போராட்டம்
தஞ்சாவூர், ஜன.24- குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்கள் தேசிய பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவு போன்ற மக்கள் விரோதச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் கருப்பு பட்டை அணியும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாணவர் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் விக்னேஷ் தலைமையில், சங்க கல்லூரி நிர்வாகிகள் மாவட்ட துணைத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் கருப்பு பட்டை அணிந்து வகுப்பில் கலந்து கொண்டனர். இதே போல், கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரியில் மாணவர்கள் கருப்பு பட்டை அணியும் போராட்டம் நடைபெற்றது. மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் சங்க கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். நகர செயலாளர் பி.அருண்குமார் தலைமை தாங்கினார்.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: இலக்கியப் போட்டிகள்
புதுக்கோட்டை, ஜன.24- புதுக்கோட்டை 4-ஆவது புத்தகத் திரு விழாவையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள் ளன. புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டை 4-ஆவது புத்தகத் திருவிழா வருகின்ற பிப்.14 முதல் 23-ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்ற வளா கத்தில் நடைபெறுகிறது. புத்தகத் திரு விழாவையொட்டி சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு, அறிவியல், இலக்கிய ஆளுமை களின் உரைவீச்சு, மாணவர்களுக்கான எளிய, அறிவியல் பரிசோதனைகள், மாண வர்களுடன் விஞ்ஞானிகள் உரையாடல், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. அதனொரு பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்படுகிறது. கல்லூரி மாணவர்களுக்கான போட்டி கள் வருகின்ற பிப்.1 அன்று புதுக் கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி யில் காலை 10 மணியளவில் நடைபெறும். கவிதைப் போட்டிக்கான தலைப்பு போட்டி நடைபெறும் போது அறிவிக்கப்படும். ‘வாசிப்பு ஒரு தவம்’ என்ற தலைப்பில் கட்டு ரைப் போட்டியும், ‘என்னைக் கவர்ந்த புத்த கங்கள்’ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி யும் நடைபெறும். மேலும், புத்தகங்கள், அதன் ஆசிரியர்கள், பொன்மொழிகள், எழுத்தாளர்கள் பெற்றுள்ள விருதுகள், நூல்களில் இடம்பெற்றுள்ள கதை மாந்தர்கள் குறித்த நூலறிவு வினாடி-வினா போட்டியும் நடைபெறும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டி வருகின்ற பிப்.4-அன்று புதுக் கோட்டை ஸ்ரீபிரகதம்பாள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணிக்கு தொடங்கும். பேச்சு மற்றும் கவிதைப் பேட்டிக்களுக்கான தலைப்புகள் போட்டி தொடங்கும் முன்பாக அறிவிக்கப்படும். தமிழின் மேன்மை, தேசப்பற்று குறித்த கருத்தாழமிக்க பொரு ளில் பாட்டுப்போட்டி நடைபெறும். தமிழ் நூல்கள், நூலாசிரியர்கள், தமிழ்ச் சான்றோ ரின் புகழ்பெற்ற வரிகள், உலகப் புகழ் பெற்ற புத்தகங்கள் குறித்த நூலறிவு வினாடி -வினா போட்டி நடைபெறும் கல்லூரி அளவில் ஒரு போட்டிக்கு ஒரு வர் வீதமும், பள்ளி அளவில் ஒரு போட்டிக்கு இருவர் வீதமும் பங்கேற்கலாம். போட்டி களில் பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களிடம் இருந்து அனு மதிக் கடிதம் மற்றும் அடையாள அட்டை யுடன் வர வேண்டும். வெற்றி பெற்றவர் களுக்கு புத்தகத் திருவிழாவில் சான்றோர் களால் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங் கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஜன.24- தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டி னத்தில், முஸ்லிம் ஜமாத் மற்றும் கூட்ட மைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணி பேருந்து நிறுத்தத்திலிருந்து, புதுமனைத் தெரு மில் ரோடுவரை சென்றது. பின்னர் அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜமாத் தலை வர் கமருதீன் தலைமை வகித்தார். செய லாளர் அசன் முகைதீன், சமுதாய நல மன்ற தலைவர் அப்துல் ஹலீல் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முரு கன், தமிழ் மாநில எஸ்.டி.பி.ஐ கட்சி செயலாளர் அபுபக்கர் சித்திக், தஞ்சை- திருவாரூர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் ஹாஜா அலா வுதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் முத்து உத்திராபதி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் பஷீர் அகமது, காங்கிரஸ் கட்சி சேதுபாவாசத்திரம் வட்டாரத் தலைவர் ஷேக் இப்ராம்ஷா, சிறு பான்மை பிரிவு தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் நாகூர்கனி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.